கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6000 பணம்.. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?
பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 19 வயது நிறைவடைந்த பெண்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள், இ-ஷ்ரம் அட்டை வைத்திருக்கும் பெண்கள் உள்ளிட்ட பலரும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் மத்திய அரசு பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். பெண்களின் பாதுகாப்பு திட்டமான மிஷன் சக்தியின் துணை திட்டம் தான் இந்த திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பல நோய்களை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
குறைந்தபட்சம் 19 வயது நிறைவடைந்த பெண்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள்;, மாற்றுத்திறனாளி பெண்கள், வறுமை கோட்டிற்கு கீழ் என்ற வகையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்கள், இ-ஷ்ரம் அட்டை வைத்திருக்கும் பெண்கள், ரூ.1000க்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது பொதுத் துறை நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
பெற்றோர்கள் இந்த தவறை செய்தால் சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கு நிரந்தரமாக மூடப்படும்..
இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில், இருக்கும் முதல் இரண்டு குழந்தைகளுக்குப் பலன் ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும். முதல் குழந்தைக்கு இரண்டு தவணையாக ரூ.5000 மற்றும் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு ஒரு தவணையாக பெண் குழந்தையாக இருந்தால் ரூ.6000 பலன் வழங்கப்படும். இந்த நிதியுதவி 3 தவணைகளாக பிரித்து வழங்கப்படும். முதல் தவணை ரூ.1000, 2-வது தவணை ரூ.2000, முன்றாவது தவணை ரூ.3000 என மொத்தம் ரூ. 6000 வழங்கப்படும்.
இருப்பினும், இரண்டாவது குழந்தைக்கு நன்மைகளைப் பெற, கர்ப்ப காலத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். இது பிறக்கும் போது பாலின விகிதத்தை மேம்படுத்தவும், பெண் சிசுக்கொலையைத் தடுக்கவும் உதவும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான பெண்கள் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் 7998799804 என்ற ஹெல்ப்லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசலாம்.