போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் ரூ.5,000 மட்டும் முதலீடு பண்ணுங்க! சொளையா 3.5 லட்சம் கிடைக்கும்!
மாதாந்திர வைப்புத்தொகை ரூ. 10,000 என்றால், 5 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ. 600,000. அதற்கு வட்டி ரூ. 1,13,659. எனவே, மொத்தமாக முதிர்வின்போது ரூ. 7,13,659 கிடைக்கும்.
சிறிய அளவில் மற்றும் சீரான இடைவெளியில் பணத்தை டெபாசிட் செய்ய விரும்புவோருக்கு போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்புத் திட்டங்கள் பயனுள்ளவை. அவை மக்களுக்கு உத்தரவாதமான வருமானத்தை அளிப்பதுடன் முதிர்வடையும் போது அசலுடன் சேர்ந்து நல்ல வட்டியையும் தருகின்றன.
போஸ்ட் ஆபீஸில் தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு தொடங்கி சேமித்தால், சிறுகச் சிறுகச் சேமிக்கும் பணத்துக்கு அதிக வட்டி கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட இந்தத் திட்டத்தை விரும்பினால், மேலும் நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கடன் வசதியும் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் 6.7 சதவீத வருடாந்திர வட்டி கொடுக்கப்படுகிறது. கணக்கில் குறைந்தபட்சமக ரூ.100 மாதம்தோறும் டெபாசிட் செய்ய வேண்டும். அதை ரூ.10 இன் மடங்குகளாக அதிகரிக்கவும் செய்யலாம்.இந்தக் கணக்கை தனிநபர் கணக்காகவும் தொடங்கலாம். வேறொருவரை நாமினியாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.
10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் பெயரில் தேசிய சேமிப்பு தொடர் வைப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். ஒரு மாதத்தில் டெபாசிட் செய்யாவிட்டால் ரூ.100 க்கு ரூ.1 வீதம் அபராதம் வசூலிக்கப்படும். 3 ஆண்டுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் கணக்கை முன்கூட்டியே மூடுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
கணக்கைத் திறக்கும் நேரத்தில அதற்குப் பிறகோ ஐந்து ஆண்டுகளுக்கு சேர்த்து முன்பணமாக டெபாசிட் செய்யும் வாய்ப்பும் உள்ளது. 12 தவணைகளை டெபாசிட் செய்தபின், கணக்கில் உள்ள பணத்தில் 50 சதவீதம் தொகையை கடனாகப் பெறலாம். கடனுக்கான வட்டியாக ஆர்.டி. வட்டிவிகிதத்துடன் 2 சதவிகிதம் சேர்த்து விதிக்கப்படும்.
போஸ்ட் ஆபீசில் தேசிய சேமிப்பு ஆர்.டி. கணக்கு தொடங்கி ரூ. 5,000, ரூ. 10,000, ரூ. 15,000 மற்றும் ரூ. 20,000 மாதாந்திர டெபாசிட் செய்தால் முதிர்வு தொகை எவ்வளவு கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மாதம் 5,000 ரூபாய் டெபாசிட் செய்தால்
உங்கள் மாதாந்திர வைப்புத்தொகை ரூ. 5,000 அல்லது ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ. 300,000 எனில், 6.70 சதவீதம் என்ற விகிதத்தில், உங்களுக்கு ரூ. 56,830 வட்டி கிடைக்கும் மற்றும் முதிர்வுத் தொகை ரூ. 3,56,830 ஆக இருக்கும்.
மாதம் 10,000 ரூபாய் டெபாசிட் செய்தால்
மாதாந்திர வைப்புத்தொகை ரூ. 10,000 என்றால், 5 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ. 600,000. அதற்கு வட்டி ரூ. 1,13,659. எனவே, மொத்தமாக முதிர்வின்போது ரூ. 7,13,659 கிடைக்கும்.
மாதம் 15,000 ரூபாய் டெபாசிட் செய்தால்
மாதாந்திர முதலீடு ரூ.15,000 என்றால், 5 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ. 900,000 ஆக இருக்கும். இத்துடன் ரூ.1,70,492 வட்டியும் சேர்ந்து முதிர்வுத் தொகையாக ரூ.10,70,492 பெறலாம்.
மாதம் 20,000 ரூபாய் டெபாசிட் செய்தால்
மாதம் ரூ.20,000 டெபாசிட் செய்துவந்தால், 5 ஆண்டுகள் கழித்து மொத்த மூதலீட்டுத் தொகை ரூ.12,00,000 ஆகும். இதற்கு வட்டி ரூ.2,27,315. முதிர்வுத் தொகை ரூ.14,27,315 ஆக இருக்கும்.
கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக அதிமுக பிரமுகர் சுரேஷ் கைது!