சேமிப்பு கணக்கில் 10,000க்கு மேல் எடுத்தால் இந்த ரூல்ஸ்தான்.. மினிமம் பேலன்ஸ் எவ்வளவு? - அதிரடி உத்தரவு
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கில் ரூ. 10,000க்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தற்போது புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கில் அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர் ரூபாய் 10,000-க்கு மேல் பணம் எடுக்க விரும்பினால், சரிபார்ப்பு அவசியம் (verification need) என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..“Boy Friends வாடகைக்கு கிடைக்கும்.. Love Failure பெண்களுக்கு மட்டும்” - பெங்களுருவில் வினோத சம்பவம்!
அஞ்சலக சேமிப்பு கணக்கில் எந்தவித மோசடி நடக்க கூடாது என்பதற்காக இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போஸ்ட் ஆபிஸ் அக்கவுண்டில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் வரம்பு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. வந்திருக்கும் புதிய மாற்றத்தின்படி, இப்போது கணக்கு வைத்திருப்பவர்கள் கிராமின் டக் சேவா கிளையில் ஒரு நாளில் ரூபாய் 20,000 வரை எடுக்கலாம்.
இதையும் படிங்க..புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்கிறது ? உள்ளடியில் பாஜக - அடுத்த முதல்வர் யார் ?
முன்னதாக, பணம் எடுக்கும் வரம்பு ரூபாய் 5,000 ஆக இருந்தது. தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 4% வட்டி வழங்கப்படுகிறது. இந்த கணக்கில் குறைந்தபட்சம் ரூ 500 இருப்பு வைத்திருக்க வேண்டும் என்பதை கணக்கு வைத்திருக்க வேண்டும்.குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ 500க்கு குறைவாக இருந்தால், கணக்கு பராமரிப்பு அபராதமாக ரூ 100 விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் பரபரப்பு திருப்பம்.. நீதிமன்றம் ஸ்ரீமதி பெற்றோருக்கு விதித்த அதிரடி உத்தரவு !