பிரதமர் மோடியின் 2047 டார்கெட்! தனிநபர் வருமானம் 7 மடங்கு உயரும் என எஸ்பிஐ அறிவிப்பு
2023ஆம் நிதியாண்டில் 7 கோடியாக இருக்கும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2047ஆம் நிதியாண்டில் 7 மடங்கு அதிகரித்து 48.2 கோடியாக உயரும் ஸ்டேட் வங்கி அறிக்கை கூறுகிறது.
பிரதமர் மோடி தனது 10வது சுதந்திர தின உரையில் 2047ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றிவிடுவேன் என்று கூறிய நிலையில், எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் நாட்டின் தனிநபர் வருவாய் எழு மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அப்போது அதன் மதிப்பு 2 மடங்கு அளவுக்குத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்டேட் வங்கி வெளியிட்ட நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி குறித்த அறிக்கையில், இந்தியா 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் 2047ஆம் ஆண்டில் நாட்டில் தனிநபர் வருமானம் ஏழு மடங்கு உயரும் எனத் தெரிவித்துள்ளது. தனிநபர் வருமானம் தற்போது உள்ள ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.14.9 லட்சமாக உயரும் என்று எஸ்பிஐ கணித்துள்ளது.
விஸ்வகர்மா திட்டத்தில் ஒரு லட்சம் கடன்! அதிகபட்ச வட்டியே 5% தான்! மத்திய அரசு அறிவிப்பு
இந்த அறிக்கையில் 2023 முதல் 2047 வரையிலான பணவீக்கம் குறித்து கணக்கிடவில்லை. எனவே, ரூ.14.9 லட்சம் வருவாய்க்கு இன்று இருக்கும் மதிப்பு 24 ஆண்டுகளுக்குப் பிறகும் இதேபோல இருக்காது என்பது கவனிக்கத்தக்கது. எனவே, பணவீக்கத்தையும் கணக்கிட்டால், தனிநபர் வருமானம் இரண்டு மடங்கு மட்டுமே உயரக்கூடும்.
கடந்த 10 வருட பணவீக்க விகிதங்களின் சராசரியான 5 சதவீதத்தை வைத்துக் கணக்கிட்டால், இன்றைய ரூ.14.9 லட்சத்தின் மதிப்பு 2047ஆம் ஆண்டில் வெறும் ரூ.4 லட்சமாகவே இருக்கும்.
60 வயது அரசு ஊழியரை மயக்கிய பெண்கள்! அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ரூ.82 லட்சம் அபேஸ்!
இந்தியாவின் தனிநபர் ஆண்டு வருமானம் தற்போது குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுடையதைக் காட்டிலும் மிகக் குறைவானது. இது வங்கதேசம் போன்ற நாடுகளைவிடவும் குறைவு.
இந்தியாவின் வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறித்தும் எஸ்பிஐ அறிக்கை கணிப்புகளை முன்வைத்துள்ளது. 2023ஆம் நிதியாண்டில் 7 கோடியாக இருக்கும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2047ஆம் நிதியாண்டில் 7 மடங்கு அதிகரித்து 48.2 கோடியாக உயரும் என அறிக்கை கூறுகிறது.
தனிநபர் வருமானம் 14.9 லட்சமாக வளரும் அதே வேளையில், வருமான வரி தாக்கல் செய்பவர்களின் வருடாந்திர சராசரி வருமானம் 4 மடங்குக்கும் குறைவாகவே அதிகரிக்கும். அதாவது, ரூ.13 லட்சம் ரூபாயிலிருந்து ரூ.49.7 லட்சமாக உயரும் என எஸ்பிஐ அறிக்கை கணிக்கிறது.
சென்னையில் அஞ்சல் துறை வேலைவாய்ப்பு... 2,994 பணியிடங்கள்... தகுதித் தேர்வும் கிடையாது!