60 வயது அரசு ஊழியரை மயக்கிய பெண்கள்! அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ரூ.82 லட்சம் அபேஸ்!
பெங்களூருவில் 60 வயதான அரசு ஊழியர் ஒருவருக்கு ஆசை வலை வீசி நெருக்கமாகப் பழகிய பெண்கள் அவரிடம் ரூ.82 லட்சம் பணத்தைச் சுருட்டிச் சென்றுள்ளனர்.
60 வயதான ஓய்வுபெற்ற மாநில அரசு ஊழியரிடம் நெருங்கிப் பழகி அவரிடம் இருந்து ரூ.82 லட்சத்துக்கும் மேல் பணத்தைப் பறித்துச் சென்ற வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரீனா அன்னம்மா (40) சினேகா (30), சினேகாவின் கணவர் லோகேஷ் (26) ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜெயநகர் காவல்துறையில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் புகார் அளித்துள்ளார். ஸ்ரீநகரில் வசிக்கும் நரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏப்ரல் மாதம் தனது நண்பர் ஒருவர் மூலம் அன்னம்மா தனக்கு அறிமுகமானார். அன்னம்மாவின் ஐந்து வயது மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அன்னம்மாவுக்கு நிதி உதவி செய்யுமாறு அவரது நண்பர் பரிந்துரைத்தார்.
பின்னர், ஒருநாள் நரேஷ், அன்னம்மா இருவரும் ஒரு ஹோட்டலில் சந்தித்துள்ளனர். அன்று நரேஷ் அன்னம்மாவுக்கு ரூ 5,000 பணம் கொடுத்துள்ளார். அதன்பிறகு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அவரிடம் அன்னம்மா மேலும் சில ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
92 வயசானும் அசராத மர்டோக்! லெஸ்ஸியை கழற்றிவிட்டதும் அடுத்த பெண்ணுடன் டேட்டிங் உல்லாசம்!
மே முதல் வாரத்தில், எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு அருகிலுள்ள ஹஸ்கூர் கேட்டில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு நரேஷை அழைத்திருக்கிறார். அப்போது அன்னம்மா தன்னுடன் உடலுறவு கொள்ளச் சொன்னதாகவும் ஆனால் தான் அதற்கு மறுத்துவிட்டதாகவும் நரேஷ் கூறுகிறார். ஆனால், அன்னம்மா தன்னை மிரட்டி தன்னுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டதாகவும் நரேஷ் சொல்கிறார். பின்னர் இருவரும் மேலும் சில முறை அதே ஹோட்டலில் தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளனர்.
ஒருநாள் அன்னம்மா தன் தோழி சினேகாவை நரேஷுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அதிலிருந்து சினேகாவும் நரேஷிடம் கடன் வாங்க ஆரம்பித்துவிட்டார். நாட்கள் செல்லச்செல்ல அன்னம்மா அவர்கள் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாக கூறி நரேஷை விரட்ட ஆரம்பித்துவிட்டார். பின்னர், சினேகாவும் அந்த வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்புவதாக அவரை பிளாக்மெயில் செய்யத் தொடங்கினார்.
சினேகா ரூ.75 லட்சம் கேட்டு, சில வீடியோக்களை அவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். அவர் தனது வருங்கால வைப்பு நிதியில் இருந்து ரூ.82 லட்சத்தை எடுத்து அன்னம்மா மற்றும் சினேகாவுக்குக் கொடுத்துள்ளார். மிரட்டி பணம் பறித்ததை யாரிடமாவது தெரிவித்தால், தனது மகள் பலாத்காரம் செய்யப்படுவாள் என இருவரும் எச்சரித்தனர் எனவும் நரேஷ் தரப்பில் கூறப்படுகிறது.
விஸ்வகர்மா திட்டத்தில் ஒரு லட்சம் கடன்! அதிகபட்ச வட்டியே 5% தான்! மத்திய அரசு அறிவிப்பு
சில நாட்களுக்குப் பிறகு அந்த பெண்கள் மேலும் ரூ.42 லட்சத்தை கேட்டுள்ளனர். தொல்லை தாங்க முடியாமல் நரேஷ் போலீசை அணுகினார். புகாரின் பேரில், மிரட்டி பணம் பறித்தல், கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக மூத்த போலீசார் அதிகாரி ஒருவர் சொல்கிறார்.
"மூன்று பேரை கைது செய்து, அவர்களது வங்கிக் கணக்கில், உள்ள ரூ.25 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. சுமார் 300 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மூவரும் குடகைச் சேர்ந்தவர்கள்" என போலீசார் தெரிவிக்கின்றனர். மூவரும் வேறு சில ஆண்களையும் ஏமாற்றியதும் இதையே வாடிக்கையாகச் செய்துவந்திருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் இவர்கள் மீது வேறு புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இரண்டு பெண்களின் குற்றச் செயல்களுக்கு லோகேஷ் உடந்தையாக இருந்த லோகேஷ் மடிகேரியில் உள்ள எஸ்டேட்டில் பணிபுரிகிறார். சினேகாவுக்கும் லோகேஷுக்கும் ஒரு வயது குழந்தைக்கு உள்ளது. அன்னம்மா தனது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும் அதன் பிறகு ஆண்களுடன் நட்பு வைத்து மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்திருப்பதாகவும் விசாரணையில் தெரிந்திருக்கிறது.
Chandrayaan-3: நிலவுக்கு மிக அருகில் சந்திரயான்-3! லேண்டரை தனியாகப் பிரிக்கத் தயாராகும் இஸ்ரோ!