Chandrayaan-3: நிலவுக்கு மிக அருகில் சந்திரயான்-3! லேண்டரை தனியாகப் பிரிக்கத் தயாராகும் இஸ்ரோ!

சந்திரயான்-3 நிலவுக்கு மிக அருகே 153 கிமீ x 163 கிமீ சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் இனி விண்கலத்தில் இருந்து லேண்டர் தனியாகப் பிரிக்கப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Chandrayaan-3 undergoes last Moon-bound maneouvre

சந்திரயான்-3 விண்கலத்துக்கும் நிலவுக்கும் இடையேயான தொலைவு நான்காவது முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான செயல்முறை இன்று (புதன்கிழமை) காலை சுமார் 8.30 மணி அளவில் நிறைவு செய்யப்பட்டது. இதன் மூலம் சந்திரயான்-3 விண்கலம் சந்திரனுக்கு மேலும் நெருக்கமாக முன்னேறி இருக்கிறது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி சந்திரயான்-3 நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. பின்னர், ஆகஸ்ட் 7ஆம் தேதி நிலவைச் சுற்றும் விண்கலத்தின் உயரத்தை சுமார் 14,000 கிமீ குறைத்து, சந்திரனுக்கு அருகில் 4,313 கி.மீ. தூரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.  பின், ஆகஸ்ட் 9ஆம் தேதி மேலும் உயரம் குறைக்கப்பட்டு 1,437 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது.

சுதந்திர தினத்தில் நாங்க தான் கொடி ஏத்துவோம்... கேரள பள்ளிவாசலில் இரு பிரிவினர் இடையே கைகலப்பு

கடந்த திங்கட்கிழமை 150 கிமீ x 177 கிமீ சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. அதைத் தொடர்ந்து இன்று மேலும் உயரம் குறைக்கப்பட்டு சந்திரயான்-3 சந்திரனுக்கு மிக நெருக்கமான சுற்றுப்பாதையை எட்டியுள்ளது. இத்துடன் விண்கலம் சந்திரனைச் சுற்றிவருவதை முடிக்கிறது. இனி விண்கலத்தின் உந்துவிசை தொகுதி மற்றும் தரையிறங்கும் லேண்டர் தொகுதி ஆகியவை நாளை  (ஆகஸ்ட் 17) பிரிக்கப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

"இன்றைய வெற்றிகரமான நகர்வின் மூலம் சந்திரயான் -3 விண்கலம் நிலவுக்கு மிக அருகில் 153 கிமீ x 163 கிமீ சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இத்துடன், சந்திரனை நோக்கி விண்கலத்துக்கு உந்துவிசை அளிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைகின்றன. இனி உந்துவிசை தொகுதி, லேண்டர் ஆகியவை தங்கள் தனித்தனி பயணங்களுக்குத் தயாராகும்" என இஸ்ரோ ட்வீட் செய்துள்ளது.

தரையிறங்கும் தொகுதி பிரிந்த பின் அதில் உள்ள சிறிய ராக்கெட்கள், எஞ்சின்கள், சென்சார்கள் உள்ளிட்டவை சரியாக இயங்குகின்றனவா என்று சோதனை செய்யப்படும். சோதனைக்குப் பின் ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரயான்-3 நிலவில் மென்மையான தரையிறக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி திருப்பதி செல்லும் பக்தர்கள் கையில் கம்புடன் தான் போகவேண்டுமாம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios