சுதந்திர தினத்தில் நாங்க தான் கொடி ஏத்துவோம்... கேரள பள்ளிவாசலில் இரு பிரிவினர் இடையே கைகலப்பு
கேரள மாநிலம் காசர்கோட்டில் எருதும்கடவு ஜமாத் பள்ளிவாசலில் சுதந்திர தினத்தன்று யார் தேசியக் கொடி ஏற்றுவது என்பதில் இரு பிரிவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தையொட்டி, கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் எருதும்கடவு ஜமாத் பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை இரு பிரிவினர் இடையே தேசியக் கொடி ஏற்றிவதில் தகராறு ஏற்பட்டது. கொடியை யார் ஏற்றுவது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கைகலப்பு ஏற்பட்டது.
பள்ளிவாசல் கமிட்டியின் இரு குழுக்களிடையே நான்கு மாதங்களாக மோதல் இருந்து வந்தது. முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இரு தரப்பினரும் முடிவு செய்தனர். சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை இரு தரப்பினரும் சேர்ந்து ஒன்றாக ஏற்றுவது என தீர்மானித்தனர். அதன்படி ஆகஸ்ட் 15 அன்று, மசூதியில் கொடியேற்றும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், கொடியேற்ற வந்ததும் யார் கொடி ஏற்றுவது என்பதில் இரு தரப்புக்கும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு தரப்பினரும் இணைந்து கொடியை ஏற்ற முயன்றதால் மோதல் வெடித்தது. இதன் மோதலின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இனி திருப்பதி செல்லும் பக்தர்கள் கையில் கம்புடன் தான் போகவேண்டுமாம்!\
தேசியக் கொடியை அவமதிக்க முயன்றதாகக் கூறி இச்சம்பவம் குறித்து வித்யாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை செவ்வாயன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடியது. பிரதமர் மோடி 10வது முறையாக டெல்லியில் உள்ள செங்கோட்டையில் உரை நிகழ்த்தினார்.
கேரளாவிலும் முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பேசிய பினராயி விஜயன், கடந்த 76 ஆண்டுகளில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்தார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இருக்கும் தங்கள் தேசத்தைப் பற்றி ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும் எனவும் முதல்வர் கூறினார். வரவிருக்கும் ஆண்டுகளில் அறிவியல், சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் விரைவான முன்னேற்றங்களை ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நாங்களும் கொண்டாட்டத்தில் இணைகிறோம்! இந்தியாவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்து