Asianet News TamilAsianet News Tamil

paytm share: பேடிஎம் பங்குகள் செம அடி: சரிவுக்கு காரணமான இரு விஷயங்கள்

paytm share : வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கினாலும் சில பங்குகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் முக்கியமானது பேடிஎம் நிறுவனத்தின் பங்குகளாகும். 

Paytm share :Paytm shares crash 13%
Author
Mumbai, First Published Mar 14, 2022, 10:38 AM IST

வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கினாலும் சில பங்குகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் முக்கியமானது பேடிஎம் நிறுவனத்தின் பங்குகளாகும். 

13 % சரிவு

வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் 13 சதவீதம் சரிந்தன என்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பேடிஎம் பங்குகள் சரிவுக்கு இரு முக்கியக் காரணங்கள் சந்தை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதைப்படிக்க மறக்காதிங்க:புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்குத் தடை: ஆர்பிஐ உத்தரவு

முதலாவதாக ரிசர்வ் வங்கி விதித்த தடை, 2-வது பேடிஎம் நிறுவனத் விஜய் சேகர் திடீரென கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டது. இரு சம்பவங்களும் முதலீட்டாளர்களை பாதி்த்துள்ளன.

Paytm share :Paytm shares crash 13%

பேடிஎம் பேமெண்ட் வங்கி புதிதாக எந்த வாடிக்கையாளர்களையும் சேர்க்கக்கூடாது என கடந்த 11ம் தேதி ரிசர்வ் வங்கி திடீரெனத் தடை விதித்தது. அந்த நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப முறையில்  சிக்கல் இருப்பதால், அதை முறையாக தணிக்கை செய்து அறிக்கைதாக்கல் செய்யும்வரை தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தது. ரிசர்வ் வங்கியின் உத்தரவை ஏற்று உடனடியாக ஐ.டி.தணி்க்கைக்கு ஏற்பாடு செய்வதாக பேடிஎம் நிறுவனமும் தெரிவித்தது. 

கைது

இரண்டாவதாக பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர், காரை வேகமாக ஓட்டி போலீஸ் டிசிபியின் கார்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய டெல்லி போலீஸார் விஜய் சேகரை கைதுசெய்தனர். அதன்பின் ஜாமீனில் வெளிவரக்கூடியபிரிவு என்பதால், அவரை உடனடியாக ஜாமீனில் வெளியே அனுப்பினர்.

இதைப் படிங்க paytm:பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கைது: விவரம் என்ன?

விலை திடீர் சரிவு

இந்த இரு சம்பவங்களால் பேடிஎம் நிறுவனத்தின் பங்குவிலை நிப்டியில் 13 சதவீதம் சரிந்து, ரூ.675 ஆகச் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கவலையில் உள்ளனர். வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில் பேடிஎம் நிறுவனப் பங்கு விலை ரூ.774 ஆகஇருந்தது. 

மிகப்பெரிய பேமெண்ட் நிறுவனமான பேடிஎம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐபிஓ மூலம் ரூ.18,300 கோடி ஈட்டியது. முன்னணி தரகு நிறுவனமான மெக்குயரி செக்யூரிட்டிஸ் நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தின் பங்குவிலையை ரூ.700 வரை மட்டுமே நிர்ணயித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் தடையால் பங்கின் விலையை தரகுநிறுவனம் குறைத்துள்ளது.

Paytm share :Paytm shares crash 13%

இதைப் படிங்க: Share market today: பங்குச்சந்தையில் சுறுசுறுப்பு: சென்செக்ஸ், நிப்டி கிடுகிடு உயர்வு: காரணம் என்ன?

ஐபிஓ

பேடிஎம் ஐபிஓ மதிப்பு ரூ.1.50லட்சம் கோடியாக இருந்து. ஆனால் ரிசர்வ் வங்கியின் தடை, தரகுநிறுவனத்தின் மதிப்புக்குறைப்பால் பேடிஎம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.44ஆயிரம் கோடியாகக் குறைந்துள்ளது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios