share market today: வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 16ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 16ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

விலை குறைந்தது 

ரஷ்யா உக்ரைன் போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 140 டாலர் வரை உயர்ந்ததால், முதலீட்டாளர்கள் அச்சப்பட்டு முதலீடு செய்யத் தயங்கினர். ஆனால், கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை படிப்படியாகக் குறையத் தொடங்கி பேரல் 110 டாலராகச் சரிந்துள்ளது. 

இதைப்படிக்க மறக்காதிங்க: share market today: படிச்சிட்டு முதலீடு செய்யுங்க! அடுத்தவாரம் பங்குச்சந்தையை தீர்மானிக்கும் காரணிகள் என்ன?

அதுமட்டுமல்லாமல் முதலீட்டாளர்களுக்கு கவலையை அளித்துவந்த அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப்பெறுவது அதிகரித்து வந்தது. ஆனால், முதலீட்டை திரும்பப்பெறுவதும் குறைந்துவிட்டது. 

பெட் வங்கி வட்டிவீதம்

இப்போது முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கும் கவலை வரும் 16ம் தேதி அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துமா அல்லது தொடர்ந்து இப்போது இருக்கும் நிலை நீடிக்குமா என்பதுதான். அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரித்திருப்பதால், 25 புள்ளிகள் வட்டி உயர்வு இருக்கக்கூடும் என்று சந்தை கணிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதை முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.ஒருவேளை அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை உயர்த்திவிட்டால், அன்னிய நேரடி முதலீட்டாளர்கள் பணத்தை எடுத்து அந்நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யத் தொடங்கும்போது பங்குச்சந்தையில் சரிவு ஏற்படும்.

பணவீக்க விவரங்கள்

இது தவிர உள்நாட்டுப் பணவீக்க விவரங்கள் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இதில் பணவீக்கம் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டு அளவான 6% வரை இருந்தால் பிரச்சினையில்லை. அதற்கு மேல் உயரும்பட்சத்தில் அடுத்துவரும் நிதிக்கொள்கையில் வட்டிவீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படும்.

இதை படிக்க மறக்காதிங்க: HDFC bank: ஆரம்பிக்கலாம்: ஹெச்டிஎப்சி வங்கிக்கு இருந்த 2 ஆண்டுகள் தடைகளை நீக்கியது ரிசர்வ் வங்கி

இவை இரண்டு அம்சங்களையும் முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இதற்கிடையே ஹெச்டிஎப்சிவங்கிக்கு கடந்த2 ஆண்டுகளாக டிஜிட்டல் வர்த்தக நடவடிக்கையைத் தொடங்க ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடை நேற்று முன்தினம் நீக்கப்பட்டது. இதனால் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் காலை முதல் உயர்ந்த நிலையிலேயே இருக்கின்றன

உற்சாகத் தொடக்கம்

வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து, 55,850 புள்ளிகளும், தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 51 புள்ளிகள் அதிகரித்து, 16,681 புள்ளிகளும் ஏற்றம் கண்டன.

சென்செக்ஸில் ஹெச்டிஎப்சி, இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ, ஏசியன் பெயின்ட்ஸ், டெக் மகிந்திரா, பஜாஜ் பின்சர்வ், விப்ரோ ஆகியவை முதலீ்ட்டாளர்களால் அதிகமாக வாங்கப்படுகின்றன. இந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்சிஎல், டாக்டர் ரெட்டீஸ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, ரிலையன்ஸ், பவர்கிரிட், ஐஓசி, பிபிசிஎல், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ லைப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இழப்பில் செல்கின்றன

இதை படிக்க மறக்காதிங்க: Share market today: கடும் ஏற்ற இறக்கம்: லேசான உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை

உயர்வு

பேடிஎம் பேமெண்ட் வங்கி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க ரிசர்வ் வங்கி விதித்த தடையால், அந்த நிறுவனத்தின் பங்குகள் 12 சதவீதம் சரிந்தன. நிப்டியில் வங்கி, ஐடி, ஊடகத்துறை பங்குகள் லாபத்தை ஈட்டிவருகின்றன. ஆட்டமொபைல், ரியல் எஸ்டேட், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறைபங்குகள் சரிவில் உள்ளன