பார்த்தா நம்ப மாட்டீங்க; எளிமையான வாழ்க்கை வாழும் முதியவரின் பங்குகளின் மதிப்பு ரூ. 100 கோடி; வைரல் வீடியோ!!
ஒவ்வொரு ஆண்டும் டிவிடன்ஸ் மட்டும் ஆறு லட்சம் ரூபாய், பல்வேறு நிறுவனங்களில் 100 கோடி ரூபாய்க்கு அளவிற்கு பங்குகளை வைத்திருந்தும், எளிமையான வாழ்க்கை வாழும் இவரைப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது அதில் போதிய அறிவு இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். இல்லையென்றால் எப்படிபட்டவர்களையும் கவிழ்த்துவிடும். கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நூறு கோடி ரூபாய்க்கு பங்குகளை வைத்து இருப்பது குறித்து ராஜீவ் மேத்தா X (எக்ஸ்) தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
அவரது பதிவில், ''எல் அண்டு டி நிறுவனத்தில் ரூ. 80 கோடி அளவிற்கும், அல்ட்ராடெக் சிமெண்டில் ரூ. 21 கோடிக்கும், கர்நாடகா வங்கியில் ரூ. 1 கோடிக்கும் பங்குகளை வைத்து இருக்கிறார் இந்த முதியவர். ஆனாலும், எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Today Gold Rate in Chennai : நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்.. சரசரவென குறைந்த தங்கம் விலை..!
மேலும் முதியவர் பேசும் வீடியோவையும் ராஜீவ் மேத்தா பதிவு செய்து இருக்கிறார். அந்த வீடியோவில், ''ஆண்டுக்கு எனக்கு ஆறு லட்சம் ரூபாய் அளவிற்கு டிவிடன்ஸ் கிடைக்கிறது'' என்று அந்த முதியவர் கூறுகிறார்.
இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒருவர் தனது பதிவில், ''எந்தவித பதற்றமும் இல்லாமல் பங்குகளையும் விற்காமல், எளிமையாக இருப்பதுவும் ஒரு அதிகாரம் தான்'' என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர் தனது பதிவில், ''எளிமையான மனிதர் நல்ல பங்குகளை வைத்து இருக்கிறார்'' என்று பதிவிட்டுள்ளார்.
சிலரோ பணத்தை பயன்படுத்தாமல் சொத்தாக சேர்த்து வைத்து என்ன பயன்? எதையும் அனுபவிக்கவில்லை. பணம் என்பது எரிபொருள் போன்றது. டேங்கில் வைத்திருந்து அதை பயன்படுத்தவில்லை என்றால் என்ன பயன் என்று பலவாறு கேள்விகளை எழுப்பி உள்ளனர். ஆனாலும், பங்குச்சந்தையில் இந்தளவிற்கு பங்குகளை வைத்திருக்கும் இவரை பெரும்பாலும் பாராட்டவே செய்கின்றனர்.