ola electric: ola scooter: அட்ராசக்கை! 2 மாசத்துல ரூ.500 கோடி வருவாய்: வியக்கவைத்த ஓலாவின் அறிக்கை
ola electric: ola scooter :நடப்பு நிதியாண்டின் இரு மாதங்களில் ஓலா பேட்டரி ஸ்கூட்டர்களின் வருவாய் ரூ.500 கோடியைக் கடந்துவிட்டது என்று ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் இரு மாதங்களில் ஓலா பேட்டரி ஸ்கூட்டர்களின் வருவாய் ரூ.500 கோடியைக் கடந்துவிட்டது என்று ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓலா நிறுவனம் தயாரித்த ஓலா பேட்டரி ப்ரோ பேட்டரி ஸ்கூட்டர்கள் தீப்பிடித்த சம்பவத்துக்குப்பின் விற்பனை குறைந்துவிட்டதாக பல்வேறுதகவல்கள் வந்தன. இந்தத் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஓலா நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஷாக்ஆகாதிங்க! 220 ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு கோடிக்கு மேல் சம்பளம்: எந்த நிறுவனம் தெரியுமா?
ஓலா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, “ நடப்பு நிதியாண்டின் முதல் இரு மாதங்களில் ஓலா பேட்டரி ஸ்கூட்டர்கள் விற்பனை வருவாய் ரூ.500 கோடியைக் கடந்துவிட்டது. இந்த நிதியாண்டுக்குள் ரூ.7800 கோடியை(100 கோடி டாலர்) கடந்துவிடுவோம் என நம்புகிறோம்.
நிதிஆயோக் சிஇஓவாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்: ஸ்வச் பாரத் திட்ட வெற்றி நாயகர்
இதன் மூலம் ஓலா நிறுவனத்தின் ஸ்கூட்டர் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருவது தெரிகிறது. ஓலா பேட்டரி ஸ்கூட்டர்களின் எதிர்காலம் வலிமையாக இருக்கிறது. கிருஷ்ணகிரியில் செயல்படும் ஓலா நிறுவனத்தின் ப்யூச்சர் தொழிற்சாலையில் எங்கள்உற்பத்தியை சீரமைத்து தினசரி 1000 ஸ்கூட்டர்களாக அதிகரிக்க இருக்கிறோம். எங்களுக்கு ஏராளமான ஆர்டர்கள் குவிந்துள்ளன, அதற்கு ஏற்றார்போல் தயாராகுவோம்” எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், கடந்த 2 மாதங்களில் ஓலா பேட்டரி ஸ்கூட்டர்கள் எத்தனை விற்பனையாகின என்பது குறித்து அறிக்கையில் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
வேகன் வாகனப்பதிவு புள்ளிவிவரங்கள்படி, ஓலா எஸ்1ப்ரோ வாகனப் பதிவு ஏப்ரல் மாதம்12,683 வாகனங்கள் விற்கப்பட்ட நிலையில் மே மாதத்தில் 9,196க் குறைந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை நாடுமுழுவதும் 50ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மேல் ஓலா ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
TATAmotors Nexon பேட்டரி கார் தீப்பிடித்தது எப்படி? விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து ஓலா நிறுவனம் பேட்டரி ஸ்கூட்டர்களு்ககான ஆர்டர்களை எடுத்து வருகிறது. முன்னதாக ஜூலை மாதம் ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்யக் கூறியது.
ஓலா நிறுவனம் எஸ்1 மற்றும் எஸ்1ப்ரோ ஆகிய இரு மாடல்களில் பேட்டரி ஸ்கூட்டர்களை தயாரிக்கிறது. இதில் எஸ்1 ஸ்கூட்டர்விலை ரூ.99,999 ஆகவும், எஸ்1ப்ரோ விலை ரூ.1,29,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஓலா ஸ்கூட்டர் தீப்பிடித்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி ட்ரண்டானது. இதையடுத்து, 1441 வாகனங்களை கடந்த ஏப்ரல் மாதம் ஓலா நிறுவனம் திரும்பப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.