tata nexon ev fire : டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்த நெக்ஸன்(Nexon)  பேட்டரி கார் எவ்வாறு தீப்பற்றியது என்பது குறித்து தனிப்பட்ட ரீதியில் விசாரணை நடத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்த நெக்ஸன்(Nexon) பேட்டரி கார் எவ்வாறு தீப்பற்றியது என்பது குறித்து தனிப்பட்ட ரீதியில் விசாரணை நடத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து, மக்கள் அடுத்த கட்டமாக பேட்டரி வாகனங்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர். பேட்டரி ஸ்கூட்டர்களுக்கு மாறி வரும் நிலையில், ஓலா,ஒக்கினிகவா, ப்யூர்இவி உள்ளிட்ட சில நிறுவனங்களின் இருசக்கர வாகனங்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.இந்த சம்பவம் பேட்டரி வாகனங்கள் வாங்க நினைப்பவர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அளித்த விளக்கத்தையடுத்தும், பாதுகாப்பாக வாகனங்களை சார்ஜ் செய்வது, எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது குறித்தஅறிவுரைகளை மக்களுக்கு வழங்கின. இதனால் மக்கள் விழிப்புணர்வு அடைந்து, மீண்டும் பேட்டரி வாகனங்கள் பக்கம் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், பேட்டரி கார் தீப்பற்றி எரிந்துள்ளது. அதுவும் பிரபல டாடா மோட்டார்ஸின் நெக்ஸன்(Nexon) கார் மும்பையில் சாலையில் திடீரென தீப்பற்றி நேற்று எரிந்தது மக்கள் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Scroll to load tweet…

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் Nexon வாகனம் எவ்வாறு தீப்பிடித்தது என்ப குறித்து தனியாக விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்கிடையே மத்திய அரசும், டாடாவின் நெக்ஸன் பேட்டரி கார் எவ்வாறு தீப்பிடித்து எரிந்தது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ டாடாவின் Nexon பேட்டரி கார் எவ்வாறு தீப்பற்றியது என்பது குறித்து விசாரணை நடத்த அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய வெடிபொருள் மற்றும் பாதுகாப்பு அமைப்பு, இந்திய அறிவியில் நிறுவனம், நாவல் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜிக்கல் லேப்ரட்டரி ஆகியவைஇணைந்து எவ்வாறு தீப்பற்றியது, எந்த சூழலில் தீப்பிடித்தது, தீர்வுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் நெக்ஸன் பேட்டரி கார் எவ்வாறு தீப்பற்றி எரிந்தது குறித்து தனியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “ டாடா நெக்ஸன் கார் தீப்பற்றியது குறித்த சமூக வலைத்தளத்தில் வரும் வீடியோ குறித்து அறி்ந்தோம். தீவிபத்து ஏற்பட்டது குறித்து விரிவாக விசாரணை நடத்தி உண்மை நிலவரம் கண்டுபிடிக்கப்படும்.

எங்கள் விசாரணையின் முடிவும் மக்களுக்குத் தெரிவிக்கப்படும். எங்கள் வாகனங்களைப் பயன்படுத்துவோருக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாக வைத்துள்ளோம். இதுவரை 30ஆயிரம் பேட்டரி கார்களை விற்பனை செய்துள்ளோம். முதல்முறையாக டாடா கார் தீப்பற்றியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.