Asianet News TamilAsianet News Tamil

அன்று ஹோட்டலில் வெயிட்டர்.. இன்று அம்பானி, டாடாவை விட பெரிய பணக்காரர்.. யார் தெரியுமா?

ஒரு காலத்தில் பெரிய லட்சியங்களுடன் ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிந்த ஒரு நபர் இன்று உலகப் பணக்காரர்களில் ஒருவராக மாறி உள்ளார்.

Nvidia CEO Jensen Huang, who was once a waiter, now richer than Mukesh Ambani, Ratan Tata Rya
Author
First Published Jun 20, 2024, 3:00 PM IST

ஒரு காலத்தில் பெரிய லட்சியங்களுடன் ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிந்த ஒரு நபர் இன்று உலகப் பணக்காரர்களில் ஒருவராக மாறி உள்ளார். மேலும் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். அவர் வேறு யாருமில்லை. Nvidia என்ற பொது வர்த்தக நிருவனத்தின் நிறுவனரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜென்சன் ஹுவாங்.

ஜென்சன் ஹுவாங் இப்போது உலகின் 11 வது பணக்காரர் ஆவார், அவருடைய சொத்து மதிப்பு 4 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஃபோர்ப்ஸின் நிகழ்நேர பில்லியனர் பட்டியலில் இதுவே அவரது மிக உயர்ந்த தரவரிசையாகும். அவர் இப்போது ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் இந்திய பில்லியனர் ரத்தன் டாடாவை விட முன்னணியில் இருக்கிறார்..

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை விஞ்சி, Nvidia நிறுவனம் உலகின் மிகவும் மதிப்புமிக்க பொது வர்த்தக நிறுவனமாக மாறியுள்ளது. நிறுவனத்தின் பங்குகள் 3.4 சதவீதம் உயர்ந்து, அதன் சந்தை மூலதனத்தை தோராயமாக $3.3 டிரில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் டெஸ்லாவின் தினசரி விற்று முதல் 10 பில்லியன் டாலரை விட, 50 பில்லியன் டாலர் சராசரி தினசரி விற்றுமுதலுடன், வால் ஸ்ட்ரீட்டில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனமாகவும் Nvidia  உருவெடுத்துள்ளது.

யார் இந்த ஜென்சன் ஹுவாங்?

ஜென்சன் ஹுவாங் தைவானில் உள்ள தைனானில் 1963 இல் பிறந்தார். இவர் 5 வயதாக இருக்கும் போது, அவரது குடும்பம் தாய்லாந்திற்கு குடிபெயர்ந்தது. தனது 9 வயதில், தனது சகோதரருடன், வாஷிங்டனில் உள்ள டகோமாவில் ஒரு மாமா வீட்டிற்கு சென்றார். அவர் தனது ஆரம்பக் கல்வியை ஒனிடா, கென்டக்கியில் உள்ள ஒனிடா தொடக்கப் பள்ளியில் முடித்தார், மேலும் போர்ட்லேண்டிற்கு அருகிலுள்ள அலோஹா உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். அவரது இளமை பருவத்தில், ஹுவாங் டெனியின் உணவகத்தில் சர்வராக பணியாற்றினார்.

பேடிஎம்-ன் டிக்கெட் பிசினஸை அலேக்காக தூக்கப்போகும் நிறுவனம் இதுவா.. ஆடிப்போன வணிக நிறுவனங்கள்!

1993 இல், ஹுவாங் கிறிஸ் மலாச்சோவ்ஸ்கி மற்றும் கர்டிஸ் ப்ரீம் ஆகியோருடன் இணைந்து Nvidia  நிறுவனத்தை நிறுவினார். 2007 ஆம் ஆண்டில், அவர் அமெரிக்காவில் 61 வது அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரியாக மாறினார். அவர் அப்போது 24.6 மில்லியன் டாலர் சம்பளம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios