Union Budget 2024 மீண்டும் பாஜக ஆட்சி: பட்ஜெட் உரையில் நிர்மலா நம்பிக்கை!
பாஜகவுக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு தேர்தல் நடைபெறவுள்ளாதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். அதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அதன் மீது உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. 2014ஆம் ஆண்டுக்கு முன்பு நாடு பல்வேறு சவால்களை சந்தித்தது. பாஜக ஆட்சி அமைந்த பின் இந்திய பொருளாதாரம் ஊக்கம் பெற்றது. நாட்டு மக்கள் புதிய நம்பிக்கையை பெற்றுள்ளனர்.” என்றார்.
பாஜகவுக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்த அவர், மக்கள் மீண்டும் பெரும்பான்மையுடன் எங்களுக்கு ஆசி அளிப்பர் என்றார். 2047இல் புதிய இந்தியாவை படைப்போம் எனவும் அவர் கூறினார்.
Union Budget 2024 live updates
சமூக நீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம் என்ற நிர்மலா சீதாராமன், சமூக நீதி என்பது அரசியல் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்துகிறோம். வீடுகளுக்கு குடிநீர், அனைவருக்கும் வீடு, குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர் என பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என்றார்.
பட்ஜெட்டுக்கு முன்பு குட் நியூஸ்: கடன் ஓட்டம் அதிகரிப்பு!
ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய 4 தரப்பினருக்கு முக்கியத்துவம் அளித்து பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும், 25 கோடி பேர் 10 ஆண்டுகளில் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஊழல் ஒழிப்பையும், வாரிசு அரசியலையும் எதிர்த்து பாஜக அரசு பணியாற்றி வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், பாஜக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களையும், அதனால் பலடைந்தவர்கள் பற்றியும் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து பேசி வருகிறார்.