மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை அறிவித்துள்ளார்.
- Home
- Business
- Budget 2025
- Union Budget 2024-25 LIVE Updates in Tamil : இடைக்கால பட்ஜெட் 2024-25 தாக்கலானது
Union Budget 2024-25 LIVE Updates in Tamil : இடைக்கால பட்ஜெட் 2024-25 தாக்கலானது

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. இது தேர்தல் ஆண்டு என்பதால், ஆட்சி மாற்றத்தை கையாளும் வகையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை அரசாங்க செலவினங்களை உள்ளடக்கும் தற்காலிக நிதித் திட்டமாகும்.
மத்திய இடைக்கால பட்ஜெட் 2024-25 - மத்திய அரசின் செலவினங்கள் என்னென்ன?
மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 - 25 : மிக முக்கிய தகவல் இதோ!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிப்ரவரி 1ம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை வெளியிட்டுள்ளார்.
பாசிஸ்டுகள் தூக்கி எறியப்படுவர்: ஹேமந்த் சோரன் கைதுக்கு உதயநிதி கண்டனம்!
ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைதுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
கால்நடைப் பராமரிப்பு நிதியத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கால்நடைப் பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
இதுவும் வேலைதான்: மரியாதை கோரும் பாலியல் தொழிலாளர்கள் உரிமைக் குழு!
மரியாதையான நடத்தை, வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என பாலியல் தொழிலாளர்கள் உரிமைக் குழு வலியுறுத்தியுள்ளது
வளர்ச்சியடைந்த பாரத்திற்கான பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்!
மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட், வளர்ச்சியடைந்த பாரத்திற்கான பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்
“ஒரு சிறு திருத்தம்.. 15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும்” - சு.வெங்கடேசன் எம்.பி., பதிலடி
பட்ஜெட் உரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்
Union Budget 2024: குறைந்து வரும் வேலை வாய்ப்பின்மை!!
மாநிலங்களுக்கு 50 ஆண்டுகள் வட்டியில்லா கடன்: ரூ.75,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்!
மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கு சிறப்பு உதவி திட்டத்தின் கீழ், ரூ.75,000 கோடி வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
அரசு துறைகளுக்கு வரும் நிதி வருவாய்!!
துறைகளுக்கு செலவிடப்படும் நிதி!!
மொரார்ஜி தேசாயின் சாதனையை சமன் செய்த நிர்மலா சீதாராமன்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமரும், நிதியமைச்சருமான மொரார்ஜி தேசாயின் சாதணையை சமன் செய்துள்ளார்
சோலார் மின்சாரம் திட்டம்!!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்!!
பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு இருக்கும் நிதி விவரங்கள்!!
Union Budget 2024 இடைக்கால பட்ஜெட் தாக்கல் நிறைவு: மக்களவை ஒத்தி வைப்பு!
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற மக்களவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது
இடைக்கால பட்ஜெட் ஹைலைட்ஸ்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் நகலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை
இடைக்கால பட்ஜெட் உரையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை
பால் கொள்முதலை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை
உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.