Union Budget 2024: மத்திய அரசின் வருவாய், செலவினம் சாதகமாக இருக்கிறது!!

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு கடன் அழிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன

Good news before budget 2024 credit flow increased how much growth in which sector smp

நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில், கடன் அளிப்பு தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கடந்த 9 மாதங்களில் (2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை), கடன் அளிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது, இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் கடன் அழிப்பு 1.6 மடங்கு அதிகரித்து ரூ.22.8 டிரில்லியன் ஆக உயர்ந்துள்ளது.

இதுவே கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் கடன் அளிப்பு ரூ.14.1 டிரில்லியனாக இருந்தது. தற்போதைய புள்ளி விவரங்களின்படி, கடந்த நிதியாண்டை விட ரூ.8.7 டிரில்லியன் அதிகரித்துள்ளது.

Union Budget 2024 live updates

எந்தெந்தத் துறையில் கடன் எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), பாரத ஸ்டேட் வங்கி (SBI) அறிக்கையின்படி, கடந்த 9 மாதங்களில் (ஏப்ரல் முதல் டிசம்பர் 2023 வரை), விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் 1.5 மடங்கும், தொழில் துறையில் 1.8 மடங்கும் கடன் அளிப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல், சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் கடன் அளிப்பு 1.7 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. உள்கட்டமைப்புத் துறையில் 6.2 மடங்கும், சேவைத் துறையில் 1.4 மடங்கும், வங்கி சாரா நிதித் துறையில் 0.6 மடங்கும் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த புள்ளி விவரங்கள், கடன் புழக்கத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை தெளிவாகக் காட்டுகின்றன. அத்துடன், 2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளில் 7 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சி விகிதத்தை அடைவது கடினமான காரியம் இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

12 லட்சம் சம்பாதிச்சாலும் வருமான வரியே கட்ட வேண்டாம்! இந்த ஐடியாவைத் தெரிஞ்சுக்கோங்க!

அதேபோல், ஜிஎஸ்டி வரி வருவாயும் அதிகரித்துள்ளது. நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2024 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் 10.4 சதவீதம் அதிகரித்து ரூ.1.72 லட்சம் கோடியாக உள்ளது. இது, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் ரூ.1,55,922 கோடியாக இருந்தது. 2024ஆம் ஜனவரி வரை தொடர்ந்து 12ஆவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் எண்ணிக்கை ரூ. 1.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையின் அடையாளம் என்று கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios