12 லட்சம் சம்பாதிச்சாலும் வருமான வரியே கட்ட வேண்டாம்! இந்த ஐடியாவைத் தெரிஞ்சுக்கோங்க!

எல்லா முதலீட்டு வாய்ப்புகளையும் பயன்படுத்தினால் வரிக்கு உட்பட்ட வருமானத்தை ரூ.5 லட்சத்துக்குக் குறைவாகக் கொண்டுவரலாம். அப்போது ஒரு ரூபாய்கூட வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

Even if you get 12 lakh salary Rs.0 only tax...!? How to do it? sgb

ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் பெறும் நபர்கள் கூட வருமான வரியை 100 சதவீதம் சேமிக்கலாம். அதற்கு சரியான முறையில் திட்டமிட்ட முதலீடுகளைச் செய்தால் வருமான வரி செலுத்தாமல் சேமிக்க முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்.

பழைய வருமான வரி முறையின் கீழ் 5 லட்சத்திற்கு மேல் வருவாய் உள்ளவர்களும், புதிய வருமான வரி முறையின் கீழ் 7.25 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களும் வருமான வரி செலுத்த வேண்டும். இந்த வரி சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். ஆனால், சேமிப்பு, மருத்துவம் போன்றவற்றில் முதலீடு செய்திருந்தால் பிடித்தம் செய்த வரியை திரும்பப் பெறலாம்.

புதிய வருமான வரி முறையில் வரம்பு அதிகமாக இருந்தாலும் அதில் அதிக சலுகைகள் கொடுக்கப்படவில்லை. நேரடியாக வருமான வரியைச் செலுத்த வேண்டும். 7 லட்சத்திற்கு கீழ் வருவாய் ஈட்டும் மக்களுக்கு இந்த முறை கைகொடுக்கும்.

பழைய வருமான வரி முறையில் மக்களுக்கு பல சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. பழைய முறையைத் தேர்வு செய்தால் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்ளும் வருமான வரியை 100 சதவீதம் சேமிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்திய EV ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் 25 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் சுவிஸ் நிறுவனம்

பழைய வருமான வரி முறையைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே பிடித்தம் செய்த வருமான வரியை கிளைம் செய்ய முடியும். இந்த வாய்ப்பு புதிய முறையில் கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், பழைய முறையைத் தேர்வு செய்து வரியைச் சேமிக்க நினைப்பவர்கள், அதிக முதலீடுகளைச் செய்ய வேண்டும். 12 லட்சம் ரூபாயில் வருமான வரிக்கு உட்பட்ட வருவாய் 5 லட்சத்துக்கும் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

Even if you get 12 lakh salary Rs.0 only tax...!? How to do it? sgb

வருமான வரி சட்டத்தின் பிரிவு 16 ன் கீழ் ரூ.50,000 நிரந்தமாக கழிக்கப்படும். வருமான வரி சட்டத்தில் பிரிவு 80C மூலம் வீட்டுக்கடன், கல்விக் கட்டணம், எல்ஐசி மற்றும் போஸ்ட் ஆபிஸ் முதலீடுகள், PF, தேசிய சேமிப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலம் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் கிளைம் செய்யலாம்.

மத்திய அரசின் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால், பிரிவு 80CCD (1B) மூலம் ரூ.50,000 கிளைம் செய்ய வாய்ப்பு உள்ளது. பிரிவு 80D ன் கீழ் கண்வர் / மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவக் காப்பீட்டு ப்ரீமியமாக செலுத்திய தொகையை ரூ.25,000 வரை கிளைம் செய்ய முடியும்.

வயதான பெற்றோர் இருந்தால், அவர்களின் மருந்துவ காப்பீட்டுக்குச் செலுத்திய ப்ரீமியம் தொகையில் ரூ.50,000 வரை கிளைம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. வருமான வரி சட்டத்தின் பிரிவு 24(b) ன் கீழ் வீட்டுக்கடன் மீது ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை கிளைம் செய்யலாம்.

இந்த வழிகளில் முதலீடு செய்வது மட்டுமின்றி, டிராவல் அலவன்ஸ், டெலிபோன் பில் ரீஇம்பர்ஸ்மெண்ட், ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் போன்றவை மூலமும் கிளைம் செய்யலாம்.

இந்த எல்லா முதலீட்டு வாய்ப்புகளையும் பயன்படுத்தினால் வரிக்கு உட்பட்ட வருமானத்தை ரூ.5 லட்சத்துக்குக் குறைவாகக் கொண்டுவரலாம். இவ்வாறு திட்டமிட்டு முதலீடு செய்தால் ஆண்டு வருவாய் ரூ.4,96,500 ஆக இருக்கும். இந்த வருமானத்திற்கு ஒரு ரூபாய்கூட வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இது குறித்து மேலும் தெரிந்துகொள்ள ஆடிட்டர்களை அணுகி ஆலோசனை பெறலாம்.

ரயில்வே லோயர் பர்த் விதிமுறையில் மாற்றம்! இனி இவங்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios