போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடம் பிடித்த அம்பானி! எவ்வளவு அடி வாங்கினாலும் அசராத அதானி!
இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 2023ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் டாப் 10 வரிசையில் இடம் பிடித்துவிட்டார். தமிழகத்தைச் சேர்ந்த சிவ் நாடாரும் இந்தப் பட்டியலில் உள்ளார்.
போர்ப்ஸ் நிறுவனம் 37வது ஆண்டாக உலக பணக்காரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் டாப் 10 வரிசைக்குள் வந்திருக்கும் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி 9வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டில் இந்தப் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்த அவர் இந்த ஆண்டு ஓர் இடம் முன் நகர்ந்துள்ளார்.
ஆசிய அளவில் நம்பர் 1 இடத்தையும் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 83.4 பில்லியன் டாலர் என போர்ப்ஸ் பட்டியலில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டைவிட முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கணிசமான அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ளது. 2022ஆம் ஆண்டு 10வது இடத்தில் இருந்த அவரது சொத்து மதிப்பு 90.7 பில்லியன் டாலராக இருந்தது.
25 ஆண்டுகளாகத் நீடிக்கும் வழக்குகளை முடிக்க 9 பில்லியன் டாலர்: ஜான்சன் அண்டு ஜான்சன் அறிவிப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மெர், கூகுளின் லேரி பேஜ்ட், செர்ஜே பிரின், பேஸ்புக்கின் மார்க் ஷக்கர்பெர்க், டெல் டெக்னால்ஜிஸ் மைக்கேல் போன்ற பல பிரபல கோடீஸ்வரர்கள் கூட முகேஷ் அம்பானியைவிடக் குறைவான சொத்து உடையவர்களாக உள்ளனர் என்று போர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது.
முகேஷ் அம்பானிக்கு அடுத்து உலக பணக்காரர்கள் பட்டியலில் வரும் மற்றொரு இந்தியத் தொழிலதிபர், ஹிண்டன்பெர்க் அறிக்கையினால் அடி வாங்கி அதள பாதாளத்தில் விழுந்த கவுதம் அதானி. போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் வரிசையில் அதானிக்கு 24வது இடம் கிடைத்துள்ளது. ஹிண்டன்பெர்க் அறிக்கை மூலம் அதானியின் பங்குச்சந்தை மோசடி அம்பலமாகி, குறுகிய காலத்தில் எக்கச்செக்கமாக அடிவாங்கினாலும் அவரது சொத்து மதிப்பு 47.2 பில்லியன் டாலர்களாக உள்ளது.
நாடு நரகத்துக்குச் செல்கிறது; உலகமே நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது: டிரம்ப் ஆவேசம்
இவர்கள் இருவருக்குப் பிறகு போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் வரும் மற்றொரு இந்தியர் ஹெச்.சி.எல் (HCL) நிறுவனரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சிவ் நாடார். இவர் இந்தப் பட்டியலில் 55வது இடத்தை வசப்படுத்தி இருக்கிறார். சிவ் நாடாரின் சொத்து மதிப்பு 25.6 பில்லியன் டாலர்.
2023ஆம் ஆண்டுக்கான போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் 2,640 கோடீஸ்வரர்களின் பெயர்கள் உள்ளன. இதில் ஏறத்தாழ பாதி பேருக்கு 2022ஆண்டில் சொத்து மதிப்பு வீழ்ச்சு அடைந்துள்ளது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி சென்ற ஆண்டில் இந்தப் பட்டியலில் இருந்த 254 பணக்காரர்கள் இந்த ஆண்டு பட்டியல் இடமே கிடைக்கவில்லை.
பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவு
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர், அதிகரிக்கும் பணவீக்கம், பல நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைத் தொடர்ந்து அதிகரித்து வருவது, கிரிப்டோகரன்சி சந்தை நிலவரம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் முக்கிய வங்கிகளின் வீழ்ச்சி ஆகியவை உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பைக் குறைத்துள்ளன என்று சொல்லப்படுகிறது.
ஆனால் 2022ஆம் ஆண்டைவிட் 2023ஆம் ஆண்டில் அதிக இந்தியர்களின் போர்ப்ஸ் பட்டியலில் நுழைந்துள்ளனர். சென்ற ஆண்டில் போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்த இந்தியர்கள் 166 பேப். இந்த முறை இந்த எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பட்டியலில் வரும் இந்தியர்களின் சொத்து மதிப்பு சென்ற ஆண்டு 750 பில்லியன் டாலராக இருந்தது. இந்த முறை 75 பில்லியன் டாலர் குறைந்து, 675 பில்லியன் டாலராக உள்ளது.
திருமணப் பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடிகுண்டு... 2வது மனைவியாக மறுத்த பெண்ணை பழிவாங்கிய இளைஞர்