பனாமாவின் பசிபிக் கடற்கரையில் போகா சிகா நகருக்கு அருகே செவ்வாய்க்கிழமை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

பனாமாவின் பசிபிக் கடற்கரையில் போகா சிகா நகருக்கு அருகே செவ்வாய்க்கிழமை 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி 5:18 மணிக்கு (22:18 UTC) நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் மையப்பகுதி போகா சிக்காவிற்கு தெற்கே 44 மைல் (71 கிலோமீட்டர்) தொலைவில் இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு கூறியுள்ளது. எட்டு மைல் (13 கிலோமீட்டர்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு... டொனால்டு டிரம்ப் கைது!

பனாமாவின் சிவில் பாதுகாப்பு அலுவலகம் சேதங்கள் குறித்து உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கிறது. ஆனால் அருகில் உள்ள கொய்பா தீவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு தேசிய குடிமைத் தற்காப்பு இயக்குனர் கார்லோஸ் ரம்போ, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல் ஏதும் வரவில்லை எனவும் ஆனால் பசிபிக் கடற்கரையில் உள்ள மாகாணங்களைக் கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

வங்கதேசத்தில் பயங்கர தீவிபத்து... தீக்கிரையான துணிச்சந்தை... பல லட்ச மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்!!