வங்கதேசத்தில் பயங்கர தீவிபத்து... தீக்கிரையான துணிச்சந்தை... பல லட்ச மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்!!
வங்கதேசத்தில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய துணிச்சந்தையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின.
வங்கதேசத்தில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய துணிச்சந்தையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின. வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பங்காபஜாரில் மிகப்பெரிய வணிக சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 3000 கடைகள் உள்ளது. தற்போது ரம்ஜான் பண்டிகை என்பதால், துணிக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதி வந்தது.
இதையும் படிங்க: பூமிக்கு மிக நெருக்கமாக வரும் விண்கல்! ஏப்ரல் 6ஆம் தேதி என்ன நடக்கப் போகுது? நாசா விளக்கம்
இந்த நிலையில் அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ மலமலவென பக்கத்து கடைகளுக்கும் பரவியதால் அங்குள்ள சுமார் 3000 கடைகளும் தீக்கிரையாகின. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் ராணுவ வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நேட்டோவில் இணைந்த பின்லாந்து.. ரஷ்யா என்ன செய்யப்போகுதோ.! பதறும் உலக நாடுகள்
இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து நாசமானகின. இதை அடுத்து அங்கிருந்த வியபாரிகள் தங்கள் கடைகள் தீயில் எரிந்து சாம்பலானதால் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சிகள் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.