microsoft layoff: sundarpichai: 1800 ஊழியர்களை நீக்கிய மைக்ரோசாஃப்ட்: கூகுளையும் விட்டுவைக்காத பணவீக்கம்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கம் பெரிய மென்பொருள் நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லை. மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது நிறுவனத்திலிருந்து 1800 பேரை வேலையிலிருந்து நீக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

microsoft confirms layoff:google to slow hiring

அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கம் பெரிய மென்பொருள் நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லை. மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது நிறுவனத்திலிருந்து 1800 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் புதிதாக வேலைக்கு அமர்த்துவோரை குறைத்துக்கொண்டு குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது. 

microsoft confirms layoff:google to slow hiring

அமெரிக்காவில் ஜூன் 30ம் தேதியுடன் கடந்த நிதியாண்டு முடிந்து புதிய நிதியாண்டு தொடங்கிவிட்டது. இந்த நிதியாண்டில், நிறுவனத்தின் கட்டமைப் சீரமைக்கப்போவதாகக் கூறி, இந்த பணிநீக்கத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்துள்ளது. 

ஓலா நிறுவனத்துக்கு ரூ.1.67 கோடி அபராதம்: ரிசர்வ் வங்கி அதிரடி

ஆனாலும், தொடர்ந்து புதிய ஊழியர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள், அதில் எந்த மாற்றமும் இல்லை என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஏறக்குறைய 1.80 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில்  வெறும் 1 சதவீதம் பேர், அதாவது 1800 ஊழியர்கள் மட்டும்தான் நீக்கப்பட்டுள்ளனர் என்பதால், பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

ஆலோசனை,ப் பிரிவு வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருந்துதான் பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.  அதேநேரம் வர்த்தகத்தை தொடர்ந்து மேம்படுத்துவதிலும்முதலீடு செய்வதிலும்  கவனம் செலுத்துவோம் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் சரிந்தது: என்ன காரணம்? பெட்ரோல், டீசல் நிலை?

கூகுள் நிறுவனமும் நடப்பு நிதியாண்டில் ஊழியர்களை புதிதாக பணிக்கு எடுப்பதை குறைத்துக்கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நிலவும் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் ஆகியவை காரணமாக இந்த முடிவை எடுப்பதாக கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

microsoft confirms layoff:google to slow hiring

கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அனுப்பிய மின்அஞ்சலில் “ நடப்பு நிதியாண்டில் ஊழியர்களை புதிதாக பணிக்கு எடுப்பதை குறைக்க இருக்கிறோம். அதற்குப்பதிலாக, பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கு கவனம் செலுத்தி ஆட்கள் 2022, 2023ம் ஆண்டில் எடுக்கப்படுவார்கள். 
நம்முடைய பணி மிகவும் வேகமாகவும், துல்லியமாகவும், வேட்கையைத் தூண்டும் விதத்திலும் இருக்க வேண்டும். அதை நோக்கி முன்னேற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

ஜூன் மாத சில்லரை பணவீக்கம் 7.01% ஆகக் குறைவு: வட்டியை மீண்டும் உயர்த்துமா ரிசர்வ் வங்கி?

microsoft confirms layoff:google to slow hiring

 அமெரிக்காவில் ஜூன் மாத பணவீக்கம் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவு 9.1 சதவீதமாக அதிகரி்த்துள்ளது. உணவுப் பொருட்கள் விலை, கேஸோலின் விலை, வீட்டுவாடகை, ஊழியர்கள் ஊதியம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு செலவைக் குறைக்க முயல்கின்றன. பொருளாதார மந்தநிலை, பணவீக்கத்திலிருந்து மைக்ரோசாஃப்ட், கூகுள் நிறுவனங்களும் தப்பவில்லை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios