அமெரிக்கப் பங்குச்சந்தையான நாஷ்டாக்கில் ஃபேஸ்புக்(மெட்டா)பங்குகள் 26 சதவீதம் வீழ்ந்ததைத் தொடர்ந்து மார்க் ஜூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு முகேஷ் அம்பானி, அதானியின் சொத்துமதிப்புக்கும் கீழே சரிந்தது. இதற்கான காரணம் வெளியாகியுள்ளது. 

அமெரிக்கப் பங்குச்சந்தையான நாஷ்டாக்கில் ஃபேஸ்புக்(மெட்டா)பங்குகள் 26 சதவீதம் வீழ்ந்ததைத் தொடர்ந்து மார்க் ஜூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு முகேஷ் அம்பானி, அதானியின் சொத்துமதிப்புக்கும் கீழே சரிந்தது. இதற்கான காரணம் வெளியாகியுள்ளது. 

ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 26 சதவீதம் சர்வதேச சந்தையில் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து மார்க் ஜூகர்பெர்க்கிற்கு ஒரே நாளில் 2900 கோடி டாலர்(ரூ.2.16 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நாஷ்டாக் பங்குச்சந்தையில் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 26 சதவீதம் குறைந்து 20,000 கோடி டாலருக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டது இதுதான் முதல் முறையாகும். 

இந்த பெருத்த அடி காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்கின் நிகர சொத்து மதிப்பு 8500 கோடி டாலராகச் சரிந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலாம் மஸ்கிற்கு அவர் நிறுவனத்தின் பங்குகள் சரிந்து ஒரே நாளில் 3500 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது. அதற்கு அடுத்தார்போல், இப்போது ஜூகர்பர்கிற்கு ஏற்பட்டுள்ளது. 


ஜூகர்பெர்கிற்கு நேற்று ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பால், அவரின் சொத்து மதிப்பு இந்தியாவின் முகேஷ் அம்பானி, கவுதம் அதானியின் சொத்து மதிப்புக்கும் கீழே சரிந்துவிட்டது என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. 

காரணம் என்ன?

1.  ஆப்பிள் நிறுவனம் தனது ஐஓஎஸ் பிளாஃபார்மில் ப்ரைவசியில் பல்வேறு திருத்தங்களை செய்யஇருக்கிறது. இந்த திருத்தத்தால் ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு அம்சங்களில் வாடிக்கையாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பும் என்பது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

2.  2-வதாக தொழில்நுட்ப உலகில் ஃபேஸ்புக்கிற்கு இயல்பாக இருக்கும் இதர போட்டியாளர்களின் சமீபத்திய வளர்ச்சியும் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதால், பங்குகளை விற்கத் தொடங்கினர்.

3. அமெரிக்க ஃபெடரல் வங்கி(மத்திய வங்கி) கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் கடனுக்கான வட்டி வீதத்தை குறைத்திருந்தது. இந்த வட்டிக்குறைப்பால் ஃபேஸ்புக் போன்ற பெரிய நிறுவனங்கள் எளிதாகக் கடன் பெறவும், கடனுக்கான வட்டியும் குறைவாக இருந்தது. இதனால் லாபமும் அதிகமாக இருந்தது.ஆனால், பெடரல் பங்கி தனது நிதிக்கொள்கையில் வட்டி வீதத்தை மாற்றும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததால் பங்குகளை விற்கத் தொடங்கினர்.

4.  4வதாக ஃபேஸ்புக் ஆப்ஸை பயன்படுத்துவோர் எண்ணிக்கை முதல்முறையாகக் குறைந்துள்ளது. ஃபேஸ்புக் நன்றாக வளர்ச்சி அடைந்தபின், கடந்த காலாண்டில் முதல்முறையாக தினசரி ஆக்டிவ் யூசர்ஸ் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சத்தால் பங்குகளை விற்கத் தொடங்கினர்.

5.  கடைசியாக சீனாவின் டிக்டாக் செயலி, பைட்டான்ஸ் ஆகிய செயலிகளின் வரவு ஃபேஸ்புக்கிற்கு இருக்கும் போட்டியை அதிகரித்து சவாலான சூழலை ஏற்படுத்தியதால் முதலீட்டாளர்கள் அச்சப்பட்டு பங்குகளை விற்பனை செய்தனர். இதன் காரணமாக ஒரே நாளில் மெட்டா பங்குகள் பெரும் இழப்பைச் சந்தித்தது

6.  மெட்டா மட்டுமல்ல ஏஎஸ்எம்ஐ, இன்ஃபைன்ஆன்,எஸ்ஏபி ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் 1.5% குறைந்தன.