Asianet News TamilAsianet News Tamil

lic ipo date : தயாராக இருங்க! மே 4-ம் தேதி எல்ஐசி ஐபிஓ?: வாரியக்குழு இன்று முக்கிய முடிவு

lic ipo date : இந்தியப் பங்குச்சந்தையில் மிகவும் பெரிதானது, அனைவராலும் எதிர்பார்க்கக் கூடிய எல்ஐசி ஐபிஓ வெளியீடு வரும் மே 4ம் தேதி இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

lic ipo date : LIC board to meet Tuesday for IPO dates, issue likely opens May 4
Author
lic ipo date, First Published Apr 26, 2022, 11:33 AM IST

இந்தியப் பங்குச்சந்தையில் மிகவும் பெரிதானது, அனைவராலும் எதிர்பார்க்கக் கூடிய எல்ஐசி ஐபிஓ வெளியீடு வரும் மே 4ம் தேதி இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாரியக் குழு கூட்டம்

lic ipo date : LIC board to meet Tuesday for IPO dates, issue likely opens May 4

ஐபிஓ தேதியை உறுதி செய்வதற்காகவே இன்று எல்ஐசி நிறுவனத்தின் நிர்வாகக்குழுவினர் கூடி ஆலோசித்து, இறுதி தேதியை அறிவிக்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் பாலிசிதாரர்களுக்கு எத்தனை சதவீதம், ஊழியர்கள், சில்லரை பங்குதாரர்களுக்கு எத்தனை சதவீதம் ஒதுக்குவது, ஒரு பங்கின் விலை ஆகியவை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது

lic ipo: எல்ஐசி ஐபிஓ அளவை 40 சதவீதம் குறைக்க மத்திய அரசு திட்டம்? மே 2-ம் தேதி பங்கு விற்பனை?

எல்ஐசி ஐபிஓ வரும் மே 4ம் தேதி வெளியிடப்பட்டு, மே 9ம் தேதிவரை இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த 5 நாட்களுக்குள் விதிகளுக்குஉட்பட்டு பங்குகளை வாங்கிக்கொள்ள முடியும்.  வாரியக்குழு இன்று கூடி ஆலோசித்து இறுதி முடிவு எடுத்துவிட்டால், பங்கு வெளியீட்டுத் தேதி, ஒதுக்கீடுகள், தள்ளுபடிகள் ஆகியவை நாளை(புதன்கிழமை) அறிவிக்கப்படும்.

குறைப்பு

எல்ஐசி ஐபிஓ மூலம் 5சதவீதப் பங்குகளை விற்பனை செய்து ரூ.55ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் கோடிவரை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால்,அந்த அளவை தற்போது ரூ.21 ஆயிரம் கோடியாகக் குறைத்துக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

lic ipo date : எதிர்பார்த்திருந்த எல்ஐசி ஐபிஓ எப்போது? மத்திய அரசு அதிகாரி வெளியி்ட்ட புதிய தகவல்

ரூ.65ஆயிரம் கோடி வரை நிதி திரட்டுவதற்குப் பதிலாக ரூ.21ஆயிரம் கோடிவரை என நிதிதிரட்டும் அளவை 40 சதவீதம் சுருக்கிக்கொள்ளும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளி்ல் 3.5 % பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது.

lic ipo date : LIC board to meet Tuesday for IPO dates, issue likely opens May 4

சாதனையாக மாறும்

பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் இதுவரை ரூ.21 ஆயிரம் கோடியை எந்த நிறுவனமும் ஈட்டியதில்லை. அதிகபட்சமாக பேடிஎம் நிறுவனம் ஐபிஓ வெளியிட்டு ரூ.18,300 கோடி ஈட்டியது. எல்ஐசி ஐபிஓ வெளியிட்டால் அதுதான் பெரிதான ஐபிஓவாக இருக்கும்.

எல்ஐசி நிறுவனம் ஐபிஓ விற்பனையில் 10 சதவீதத்தை பாலிசிதாரர்களுக்கும், 5 சதவீதத்தை ஊழியர்களுக்கும், தள்ளுபடி அறிவிப்புகளையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஆனால், அதுகுறித்து இன்றைய வாரியக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். சில்லரை பங்குதாரர்களுக்கு 35 சதவீதம்வரை ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது

raghuram rajan: ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்துவது என்பது தேசவிரோதம் அல்ல: ரகுராம் ராஜன் பளீர்

காரணம் என்ன

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடந்து வருவதால், இந்த நேரத்தில் எல்ஐசி ஐபிஓ நடத்தினால், அந்நிய முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வந்து முதலீடு செய்யமாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் அமெரிக்க பெடரல் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், வட்டிவீதத்தை அடுத்த மாதத்தில் உயர்த்தப் போவதாகத் தெரிவித்துள்ளது. இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்ய முன்வருவார்களா என்ற கேள்வி  என மத்திய அரசுக்கு எழுந்தது.

lic ipo date : LIC board to meet Tuesday for IPO dates, issue likely opens May 4

அதேநேரம் பங்கு விற்பனையையும் ஒத்திவைக்கக் கூடாது, உள்நாட்டு முதலீட்டாளர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால், ஐபிஓ அளவை மட்டும் மத்திய அரசு குறைக்க திட்டமிட்டுள்ளது. அதாவது, ரூ.65ஆயிரம் கோடி வரை நிதி திரட்டுவதற்குப் பதிலாக ரூ.21ஆயிரம் கோடிவரை என நிதிதிரட்டுகிறது

Follow Us:
Download App:
  • android
  • ios