raghuram rajan: ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்துவது என்பது தேசவிரோதம் அல்ல: ரகுராம் ராஜன் பளீர்
raghuram rajan : ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்துவது என்பது தேசவிரோதச் செயல் அல்ல என்பதை அரசியல் கட்சித் தலைவர்களும், அதிகாரிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பளீரென தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்துவது என்பது தேசவிரோதச் செயல் அல்ல என்பதை அரசியல் கட்சித் தலைவர்களும், அதிகாரிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பளீரென தெரிவித்துள்ளார்.
பணவீ்க்கம்
இந்தியாவில் பணவீக்கம் கடந்த ஜனவரியிலிருந்து 6 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து வருகிறது. அதிலும் மார்ச் மாதத்தில் 6.95% உயர்ந்தது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவு என்பது 6 சதவீதம்தான், ஆனால், அதையும் மிஞ்சி கடந்த 3 மாதங்களாக பணவீக்கம் உயர்ந்து வருகிறது. ஆனால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த இதுவரை ரிசர்வ் வங்கி எந்தவிதமான நிதிக்கொள்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை
நிதிக்கொள்கைக் கூட்டம்
இந்தமாதம் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் கவர்னர் சக்தி காந்த தாஸ், பணவீக்கத்தின் அளவை மாற்றி அமைத்துள்ளோம். இதன்படி 4.5 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாக நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் அதிகரி்க்கும் என்று தெரிவித்தார். இதன் மூலம் நாட்டில் நடப்பு நிதியாண்டில் அனைத்துப் பொருட்களின் விலையும் உயரப்போகிறது என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.
வட்டிவீதம் உயர்வு தேவை
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பணவீக்கம் 6 சதவீதமாக உயர்வதற்கும் வாய்ப்புள்ளது. 2வது காலாண்டிலும் பணவீக்கம் 5.8சதவீதமாகவே இருக்கும் என்பதால், அடுத்த ஓர் ஆண்டுக்கு வட்டிவீதத்தை தொடர்ந்து உயர்த்த வேண்டியது அவசியம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அதைத் தொடர்ந்து சமையல் எண்ணெய் விலை உயர்வு, உணவுப் பொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள் விலை உயர்வு என மக்களை விலைவாசி உயர்வு நசுக்குகிறது.
ஆனால், விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய கருவியான நிதிக்கொள்கையை வைத்திருக்கும் ரிசர்வ் வங்கி, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்களிக்க வேண்டும் என்ற வார்த்தையைக் கூறி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் தாமதிக்கிறது.
தேசவிரோதம் அல்ல
இதைத்தான் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட கருத்தில் கூறியிருபப்தாவது:
“ நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கட்டத்தில் ரிசர்வ் வங்கி, கடனுக்கான ரெப்போ ரேட் வீதத்தை உயர்த்த வேண்டும். கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்துவது என்பது தேசவிரோதச் செயல் அல்ல என்பதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் புரிந்துகொள்வது முக்கியம். இந்த வட்டிவீத உயர்வு, பொருளாதாரத்தை நிலைப்படுத்தும், விலைவாசியைக் குறைக்கும்.வட்டிவீதம் உயர்த்தப்படும்போது யாரும் மகிழ்ச்சியடையமாட்டார்கள் என்பது உண்மைதான்.
குற்றச்சாட்டு
நான் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த காலத்தில் எனது நடவடிக்கையால் பொருளதாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது என்ற அரசியல்ரீதயான விமர்சனங்கள் இன்னும் எனக்கு வருகிறது. என்னுடைய முன்னோர்கள் அதாவது எனக்கு முன் இருந்த கவர்களும்கூட விமர்சிக்கிறார்கள். அதுபோன்ற நேரத்தில் உண்மையைப் பேசுவது உதவும். எதிர்காலக் கொள்கைக்கு உண்மைகள் என்பது முக்கியம். ரிசர்வ் வங்கி தனக்குத் தேவையானதைச் செய்வது அவசியம்,அதற்கான தளத்தையும் வழங்குகிறது.
பொருளாதார வளர்ச்சி, விலைவாசி குறைந்தது
2013ம் ஆண்டு செப்டம்பர் ரிசர்வ் வங்கி கவர்னராக நான் பொறுப்பேற்றபோது, பணவீக்கம் 9.5 சதவீதமாக இருந்தது. நிதிச்சிக்கலும் இருந்தது, டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மோசமாகச் சரிந்திருந்தது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி வீதத்தை 7.25 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாக உயர்த்தினேன்.பணவீக்கம் குறைந்தது.
அதன்பின் அரசின் பொருளாதாரத் திட்டங்களுக்காக 150 புள்ளிகள் குறைக்கப்பட்டு வட்டிவீதம் 6.50சதவீதமாகக் குறைந்தது. இதுபோன்ற வட்டிவீத அதிகரிப்பு என்பது பொருளதாரத்தையும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பையும் நிலைப்படுத்தும், வளர்ச்சியையும் உறுதி செய்யும்.
அந்நியச் செலாவணி கையிருப்பு
2013, ஆகஸ்ட் முதல் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் வரை, பணவீகக்ம் 9.5 சதவீதத்திலிருந்து 5.3சதவீதமாகக் குறைக்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சி 2013, ஜூனில் 5.91சதவீதத்திலிருந்து, 2016 ஜூன் –ஆகஸ்டில் 9.31 சதவீதமாக வளர்ந்தது. ரூபாயின் மதிப்பு அந்த 3 ஆண்டுகளில் மிகக்குறைவாக ரூ.63.20லிருந்து, ரூ.66.90ஆகக் குறைந்தது. அப்போது அந்நியச்செலாவணி கையிருப்பும்2013ம் ஆண்டு செப்டம்பரில் 27500 கோடி இருந்தது, 2016 செப்டம்பரில் இது 37100 கோடி டாலராக உயர்ந்தது
சுதந்திரம் தேவை
பணமதிப்பிழப்பு, பெருந்தொற்று காலம், பொருளாதார வளர்ச்சிக் குறைவு பன்ற மிகவும் சிக்கலான பணவீக்க காலத்தில்தான் ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை குறைவாகவும், பணவீக்கத்தை குறைவாகவும் பராமரித்து வந்தது. இன்று ரிசர்வ் வங்கியிடம் 60000 கோடி டாலர் கையிருப்பு இருக்கிறது ஆதலால் ரிசர்வ் வங்கி துணிச்சலாக நடவடிக்கை எடுக்க அனுமதிக்கலாம்
இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்