Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் வெளியாகும் கவாசகி Z650RS ஸ்பெஷல் எடிஷன்?

கவாசகி நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் Z650RS மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Kawasaki Z650RS 50th Anniversary Edition India launch soon
Author
Tamil Nadu, First Published Jan 22, 2022, 3:56 PM IST

கவாசகி நிறுவனம் விரைவில் புதிய Z650RS 50th ஆனிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவாசகி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே கவாசகி Z650RS மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது ஸ்பெஷல் ஆனிவர்சரி எடிஷன் மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

சர்வதேச சந்தையில் ஏற்கனவே Z650RS ஆனிவர்சரி எடிஷன் மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே மாடல் தான் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. கவாசகி நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க Z1 மோட்டார்சைக்கிள் 50-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Kawasaki Z650RS 50th Anniversary Edition India launch soon

புதிய ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுவதை  போன்றே 'ஃபயர்கிராக்கர் ரெட்' நிறத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஆப்ஷன் டூயல்-டோன், ரெட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் ஒட்டுமொத்த மோட்டார்சைக்கிளும் கோல்டன் நிற ரிம்களில் கிடைக்கிறது.

தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கவாசகி Z650RS மோட்டார்சைக்கிள் கேண்டி எமிரால்டு கிரீன் நிறம் மற்றும் கோல்டன் நிற அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி புதிய கவாசகி Z650RS ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளிலும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 649சிசி, பேரலெல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 67.3 பி.ஹெச்.பி. திறன், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. விலையை பொருத்தவரை புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை  நிர்ணயம் செய்யப்படலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios