ரூ. 84,000 கோடி சொத்து.. இந்தியாவின் பணக்கார பெண்.. அட இவங்க தானா?

பணக்கார பெண்களின் பட்டியலில் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா முதலிடம் பிடித்துள்ளார். அவரின் நிகர சொத்து மதிப்பு ரூ.84,330 கோடி.

Indias richest woman roshni nadar malhotra net worth is 84,000 crores

முதல் 10 பணக்கார இந்தியப் பெண்களில் 3 பேர் டெல்லியில் வசிக்கின்றனர். மும்பை உட்பட வேறு எந்த நகரத்தையும் விட, தேசிய தலைநகரான டெல்லியில் பணக்கார இந்தியப் பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது. மேலும், சமீபத்திய கோடக் தனியார் வங்கி ஹுருன் முன்னணி பணக்கார பெண்களின் பட்டியலில் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா முதலிடம் பிடித்துள்ளார். அவரின் நிகர சொத்து மதிப்பு ரூ.84,330 கோடி.

ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா 3,00,000 கோடி ரூபாய் சந்தை மூலதனத்துடன் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான HCL டெக்னாலஜிஸின் தலைவராக உள்ளார். சமீபத்திய பட்டியலின் படி, ரோஷ்னி நாடாரின் சொத்து மதிப்பு 2021-ம் ஆண்டில் இருந்து 54% உயர்வைக் கண்டார். இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரான தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடாரின் மகள் இந்த ரோஷ்னி நாடார். டெல்லியில் பிறந்த வளர்ந்த, அவர்,  Vasant Valley என்ற பள்ளியில் படித்தார். சுவாரஸ்யமாக, தொழில்நுட்ப நிறுவனமான HCL-க்கு தலைமை தாங்கும் போது, அவர் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் வானொலி/டிவி/திரைப்படத்தில் கவனம் செலுத்தி கம்யூனிகேஷன் பட்டப்படிப்பை முடித்தார்.

இந்த தபால் நிலைய திட்டத்தில் முதலீடு செய்தால் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கலாம்..

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக உள்ள HCL  நிறுவனத்தின் தலைமை வகிக்கிறார். HCL இன் தலைவராக இருப்பதோடு மட்டுமல்லாமல், ரோஷ்னி இந்தியாவின் முன்னணி அறக்கட்டளை நிறுவனங்களில் ஒன்றான ஷிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் உள்ளார். ஆதரவற்ற வீடுகளில் இருந்து வரும் திறமையான மாணவர்களுக்காக ஒரு தலைமைப் பள்ளியை நிறுவ உதவினார்.

 ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா ஒரு ஆர்வமுள்ள வனவிலங்கு ஆர்வலராகவும் உள்ளார்.. ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு 'Halkaa' என்ற குழந்தைகள் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார். அவர் 2019 இல் அனிமல் பிளானட்/டிஸ்கவரியில் "On The Brink" என்ற தொலைக்காட்சித் தொடரைத் தயாரிக்கத் தொடங்கினார். நாட்டின் மிகவும் ஆபத்தான உயிரினங்களின் அவலநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்தத் தொடர் 2022 இல் சிறந்த இந்திய தேசிய திரைப்பட விருதையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

IIT, IIM கல்வி இல்லை.. ரூ.12,000 கோடி Turnover! இந்தியாவின் பணக்கார கோழி விவசாயிகளின் வெற்றிக்கதை..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios