இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 140 மில்லியன் டாலர்கள் உயர்ந்து, 642.631 பில்லியன் டாலராக உள்ளது.

Indias Forex Reserves Hit All-Time High of $642.63 Billion Rya

மார்ச் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 140 மில்லியன் டாலர்கள் உயர்ந்து, 642.631 பில்லியன் டாலராக உள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்ட உயர்வாகும். இந்திய ரிசர்வ் வங்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.. ஒட்டுமொத்த கையிருப்புகளில் இது தொடர்ந்து ஐந்தாவது வாரமாக உயர்ந்துள்ளது.  

முந்தைய உச்ச நிலை செப்டம்பர் 2021 இல் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 642.453 பில்லியன் டாலர்களை எட்டியபோது பதிவு செய்யப்பட்டது. உலகளாவிய பொருளாதார சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு மஹ்த்டியில் ரூபாய் மதிப்பை பாதுகாப்பதற்காக கடந்த ஆண்டு முதல் அந்நிய செலாவணி கையிருப்பை இந்திய ரிசர்வ் வங்கி பாதுகாத்து வருகிறது.

இதனால் அவ்வபோது அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துக்கள் 123 மில்லியன் டாலர்கள் குறைந்து 568.264 பில்லியன் டாலர்களாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டாலர் அடிப்படையில் வெளிப்படுத்தப்படும், அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ள யூரோ, பவுண்ட் மற்றும் யென் போன்ற அமெரிக்க அல்லாத யூனிட்களின் மதிப்பு அல்லது தேய்மானத்தின் விளைவு வெளிநாட்டு நாணய சொத்துக்களில் அடங்கும். தங்கம் கையிருப்பு 347 மில்லியன் டாலர் அதிகரித்து 51.487 பில்லியன் டாலராக உள்ளது. 

சர்வதேச நிதியத்துடனான இந்தியாவின் இருப்பு நிலை அறிக்கை வாரத்தில் 27 மில்லியன் டாலர் குறைந்து 4.662 பில்லியன் டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே நேரம் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மார்ச் 29ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 83.40 ஆக இருந்தது.

ஃபின்ரெக்ஸ் கருவூல ஆலோசகர் (Finrex Treasury Advisors) கருவூலத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அனில் குமார் பன்சாலி இதுகுறித்து பேசிய போது, “ சந்தையைப் பார்க்கும் போது ரூபாய் மதிப்பு பலவீனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரத்திற்கான ரூபாய் மதிப்பின் வரம்பு 83.25-83.50 க்கு இடையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள் இந்த நிலைகளில் விற்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இறக்குமதியாளர்கள் தங்கள் நிலைகளை பாதுகாக்க டிப்ஸ் வாங்க வேண்டும்.” என்று கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios