Share Market Sensex, Nifty: டிரம்ப் விதித்த பரஸ்பர வரியால் உலக பங்குச் சந்தைகள் பதற்றத்தில் உள்ளன. இந்திய பங்குச் சந்தையும் சரிவை சந்தித்துள்ளது. இது நீடிக்குமா அல்லது சரியாகுமானு பார்க்கலாம்.
Indian Share Market down: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்து இருக்கும் பரஸ்பர வரியால் தொடர்ந்து உலக பங்குச் சந்தைகளில் பதற்றம் நிலவி வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதி பல்வேறு நாடுகளுக்கும் 25% பரஸ்பர வரியை விதித்து இருக்கிறார். கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமெரிக்க பங்குச் சந்தை சரிந்து காணப்பட்டது. இது தற்போது ஆசிய நாடுகளிலும் பிரதிபலிக்க ஆரம்பித்துள்ளது. இன்று இந்தியப் பங்குச் சந்தை துவக்கத்தில் சுமார் 1000 புள்ளிகள் குறைந்து காணப்பட்டது. இது நீடிக்குமா அல்லது குறைந்து தன்னைத் தானே பங்குச் சந்தை சரி செய்து கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மருந்தாக உட்கொள்ள வேண்டும் - டிம்ரப்:
பங்குச் சந்தை பெரிய அளவில் சரிந்து இருப்பதை குறித்து டிரம்ப் தனது அறிவிப்பில், ''சிலவற்றை சரி செய்வதற்கு நாம் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நம்மை மற்ற நாடுகள் மோசமான நிலையில் கையாண்டு வந்தார்கள். பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது என்று என்னால் கூற முடியாது. நமது நாடு மிகவும் வலிமையாக இருக்கிறது.
புதிய 10, 500 ரூபாய் நோட்டுகள் வருது; பழைய நோட்டு செல்லுமா? ஆர்பிஐ அப்டேட்
ஜோ பைடன் ஒரு முட்டாள் - டிரம்ப்:
''முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் அமெரிக்கா மிகவும் மோசமான நிலையில் கையாளப்பட்டு வந்துள்ளது. எங்களுக்கு முட்டாள்தனமான தலைமை இருந்த காரணத்தால், நாங்கள் அவ்வாறு நடத்தப்பட்டோம். மற்ற நாடுகள் எங்களது வர்த்தகத்தை எடுத்துச் சென்றனர். எங்களது பணத்தை, பணியை எடுத்துச் சென்றனர். இவையெல்லாம் மெக்சிகோ, சீனா, கனடா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கருப்பு திங்கள்:
அமெரிக்காவில் பங்குச் சந்தை சந்தித்து இருக்கும் வீழ்ச்சியை அடுத்து இது இன்னொரு ''கருப்பு திங்கள்'' என்று வர்ணித்து வருகின்றனர்.
இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் நிப்டி வீழ்ச்சி:
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விற்பனைக்குப் பிறகு வால் ஸ்ட்ரீட்டில் பெரிய அளவில் வீழ்ச்சி காணப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவு காணப்படுகிறது. இன்று ஒருநாள் மட்டும் நீடிக்கும் இந்த சரிவு அல்லது தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்திய சந்தை முழுமையாக அமெரிக்காவை நம்பி இல்லை. எனவே விரைவில் நல்ல வர்த்தகத்தை அடையும் என்று கூறப்படுகிறது. இன்றும் இந்தியப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 3000 புள்ளிகளுக்கும், நிப்டி1000 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து காணப்படுகிறது.
Trump Tariffs on India: இந்தியா மீது டிரம்ப் 26% வரி விதிப்பு; எந்தளவிற்கு பொருளாதாரத்தை பாதிக்கும்?
டவ் ஃபியூச்சர்ஸில் ஞாயிற்றுக்கிழமை மாலை 1,600 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால், தலால் ஸ்ட்ரீட்டிலும் அதன் விளைவுகள் உணரப்படலாம். வெள்ளிக்கிழமை, நிஃப்டி கிட்டத்தட்ட 350 புள்ளிகள் சரிவுக்குப் பிறகு 23,000 புள்ளிகளுக்குக் கீழே முடிவடைந்தது. அதே நேரத்தில் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு:
சீனாவின் மீது 34%, இந்தியாவின் மீது 26% மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது 20% என்று பரஸ்பர வரியை டிரம்ப் விதித்து இருக்கிறார். இது அமெரிக்கா மற்றும் உலக நிதிச் சந்தைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் விளைவாக, சமீபத்திய நாட்களில் அமெரிக்க பங்குகளின் மதிப்பில் இருந்து கிட்டத்தட்ட 6 டிரில்லியன் டாலர்கள் இழந்துள்ளது.
வரிகள் குறித்து நாடுகளுடன் டிரம்ப் பேசுவாரா?
வார இறுதியில் உலகத் தலைவர்களுடன் வரி தொடர்பாக பேசியதாக டிரம்ப் தெரிவித்து இருந்தார். மேலும் "அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய தயாராக இருக்கிறார்கள்" என்றும் கூறியுள்ளார். இருப்பினும், சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளுடனான வர்த்தக பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்க விரும்புவதாகவும், அதைப் பற்றிப் பேசத் தயாராக இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார். நிதிப்பற்றாக்குறை தீர்க்கப்படும் வரை வரிகள் பற்றிப் பேசப் போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
பல்வேறு நாடுகள் பேச விரும்பினால், நான் பேசத் தயாராக இருக்கிறேன். அவர்கள் தயாராக இல்லை என்றால் நான் ஏன் பேச வேண்டும்? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்.
