பங்குச் சந்தை இன்று காலை துவங்கியதில் இருந்தே சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிந்து காணப்படுகிறது.

இந்திய பங்குச் சந்தை இன்று காலை சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் இன்று காலை 9.30 மணியளவில் 600 புள்ளிகள் குறைந்து காணப்பட்டது. நிப்டி 22,750 புள்ளிகளுக்கும் குறைந்தது. சென்செக்ஸ் 75,683களிலும், நிப்டி 22,863 புள்ளிகளிலும் வர்த்தகம் செய்து வந்தது. 

முந்தைய வாரங்களில் தொடர்ந்து பங்குச் சந்தை நன்றாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் இறங்கியது. இரண்டரை சதவீதம் முந்தைய வாரங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்து காணப்பட்டது. பல்வேறு நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கை வெளியானது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களது முதலீட்டை விற்றுச் சென்றனர். இத்துடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடந்த வார வரி விதிப்பும் முக்கிய காரணமாக அமைந்தது. இதுபோன்ற காரணங்களால், இந்திய பங்குச் சந்தை கடந்த வாரம் இறங்கி காணப்பட்டது. 

ஆட்டோ பங்குகள்: நிஃப்டி ஆட்டோ 1.25% இன்று சரிந்து காணப்பட்டது. இதில் எம் & எம் மற்றும் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் ஆகியவை சரிந்து காணப்பட்டன. நிஃப்டி பேங்க் வர்த்தகத்தில், எஃப்எம்சிஜி, ஐடி, பிஎஸ்யூ பேங்க் மற்றும் ரியாலிட்டி ஆகியவையும் சரிவுடன் துவங்கின.நிஃப்டி மிட்கேப் 100 0.3% சரிந்தது, நிஃப்டி ஸ்மால்கேப் 100 0.2% உயர்ந்தது.

இந்த வங்கியில் யாரும் பணம் எடுக்கவோ.. டெபாசிட் செய்யவோ முடியாது.. ரிசர்வ் வங்கி உத்தரவு

Cryptocurrency: பொதுவாக இன்றைய வர்த்தகத்தில் கிரிப்டோ கரன்சிகளான பிட்காயின், XRP, Solana, Dogecoin ஆகியவை 6 சதவீத இறக்கத்துடன் காணப்பட்டது.

இன்று Manappuram Finance Ltd, GlaxoSmithKline Pharmaceuticals Ltd, Glenmark Pharmaceuticals Ltd ஆகியவற்றின் பங்குகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. 

வங்கி பங்குகளில் ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ ஆகியவற்றின் மதிப்பு சரிந்து காணப்பட்டது. ஜென் டெக்னாலஜிஸ் பங்கு மதிப்பு குறைந்து காணப்பட்டது. 

மதியம் 12மணி நிலவரத்தின்படி, சென்செக்ஸ் 214.93 புள்ளிகள் அல்லது 0.28 சதவீதம் குறைந்து 75,724.28 ஆகவும், நிஃப்டி 63.20 புள்ளிகள் அல்லது 0.28 சதவீதம் குறைந்து 22,866.05 ஆகவும் இருந்தது.

அரசு ஊழியர்களுக்கு இரட்டை லாபம்: அகவிலைப்படி உயர்வு!

நிலையற்ற பொருளாதாரம்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி தொடர்பான அறிவிப்புக்குப் பின்னர் உலகளவில் நிலையற்ற பொருளாதாரம் நிலவி வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது.

வங்கிகள் தங்கத்தை லண்டனில் இருந்து நியூயார்க் மாற்றம்:
அமெரிக்க வங்கிகள் லண்டன் வங்கிகளில் தங்கம் இருப்பு வைத்து இருக்கிறது. இங்கிருந்து தற்போது தங்கத்தை அமெரிக்காவுக்கு கொண்டு செல்கின்றனர். காரணம், ஐரோப்பிய நாடுகளின் மீது புதிய இறக்குமதி வரியை டிரம்ப் விதிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து ஈகுவிட்டியில் இருந்து தங்கத்தில் முதலீட்டை முதலீட்டாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டளர்கள் பங்குகளை விற்பதற்கு இதுவும் ஒரு காரணம். 

மூன்றாம் காலாண்டு ஏமாற்றம்:
இந்த மூன்றாம் காலாண்டு மட்டுமின்றி தொடர்ந்து பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நிலைமை சீராகும் என்றும் கணித்துள்ளனர். 

அந்நிய வெளிநாட்டு முதலீடு: 
FII வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் பிப்ரவரி 14, 2024 அமர்வின் இறுதியில், ரூ. 29,000 கோடிக்கு மேலான இந்தியப் பங்குகளை விற்றனர். அதே நேரத்தில் DIIகள் ரூ. 26,000 கோடிக்கும் அதிகம் மதிப்புள்ள இந்தியப் பங்குகளை வாங்கியுள்ளனர்.