wheat flour: கோதுமைக்கு மட்டுமல்ல, கோதுமை மாவு ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகள்: மத்திய அரசு திடீர் முடிவு
கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்த மத்திய அரசு, தற்போது கோதுமை மாவு மற்றும் அது தொடர்பான பொருட்கள் ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்த மத்திய அரசு, தற்போது கோதுமை மாவு மற்றும் அது தொடர்பான பொருட்கள் ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதையும் படிங்க: கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு: முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு: என்ன காரணம்?
கோதுமை மாவு ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி செய்யும் முன், அமைச்சகக் குழுவிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
உள்நாட்டில் கோதுமை விலை தொடர்ந்து விலை உயர்ந்து வந்தது, கடும் வெயில் காரணமாக கோதுமை உற்பத்தி குறையும் என்ற அறிக்கை ஆகியவற்றால், கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த இரு மாதங்களுக்கு முன் தடை விதித்தது.
இதைப் படிக்க மறக்காதிங்க: ஹெல்த் முக்கியம்! 2022ம் ஆண்டின் சிறந்த மருத்துவக் காப்பீடு திட்டங்கள்: ஒரு பார்வை
இந்நிலையில் கோதுமை மாவு ஏற்றுமதிக்கும், அது தொடர்பான பொருட்கள் ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம்(DGFT) நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ கோதுமை மாவு ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி செய்யும் முன் மத்திய அ ரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். இது ஜூலை 12ம் தேதி முதல் அமலாகும்.
ஜூலை 6 முதல் 12ம் தேதிக்கு இடையே ஏதேனும் கோதுமை மாவு ஏற்றுமதி நடந்து கப்பல் புறப்பட்டால் அதற்கு அனுமதிதரப்படும். ஏற்றுதமி தொடர்பான விவரங்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஏற்றுமதியாளர்கள் ஒப்படைக்க வேண்டும்.
மற்றவகையில் கோதுமை மாவுக்கோ அல்லது அது தொடர்பான பொருட்கள் ஏற்றுமதிக்கோ தடை ஏதும் இல்லை. மைதா, செமோலினா உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகள் உண்டு
கடந்த மே 13ம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு முற்றிலுமாக தடை விதித்தபின், உள்நாட்டுச் சந்தையில் கோதுமையின் விலை குறையத் தொடங்கியது. விலை குறையத் தொடங்கிய சூழலிலும் கோதுமை மாவுக்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதைப் படிங்க:ஸ்பைஸ்ஜெட்டுக்கு கட்டம் சரியில்ல! பங்குமதிப்பு 7% வீழ்ச்சி:52 வாரங்களில் இல்லாத சரிவு
மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ மத்திய அரசு கொண்டு வந்த கோதுமை ஏற்றுமதியை வேறு வழியில் மீறும் வகையில் ஏற்றுமதியாளர்கள் சிலர் கோதுமை மாவாக ஏற்றுமதி செய்து வருகிறார்கள். இனிமேல் அதிகமான அளவு கோதுமை மாவை ஏற்றுமதி செய்ய முடியாது.
கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதிக்கவில்லை, ஆனால் ஏற்றுமதிக்கு முன்னர் அதை அரசிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் இந்தியாவிலிருந்து 96ஆயிரம் டன் கோதுமை மாவு ஏற்றுமதியாகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரலில் 26ஆயிரம் டன்னாகத்தான் இருந்தது.
கோதுமை ஏற்றுமதியில் கோதுமை மாவு ஏற்றுமதி திடீரென அதிகரி்த்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 70 லட்சம் டன் கோதுமை, அதாவது 212 கோடி டாலர் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 274 சதவீதம் அதிகமாகும்.
கோதுமை ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்யாமல் இருந்திருந்தால், ஏற்றுமதி 80 லட்சம் டன் முதல் ஒரு கோடி டன்னாக அதிகரித்திருக்கும். தற்போது கோதுமை அதிபட்சமாக 40 லட்சம் டன்னுக்குள்ளாகவே ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்கிறது” எனத் தெரிவிக்கின்றன