- Home
- Business
- ஹெச்டிஎப்சி வங்கியில் அக்கவுண்ட் இருக்கா.! ஏப்ரல் 1 முதல் புதன் கட்டணங்கள்.! வாடிக்கையாளர் கவனத்திற்கு.!
ஹெச்டிஎப்சி வங்கியில் அக்கவுண்ட் இருக்கா.! ஏப்ரல் 1 முதல் புதன் கட்டணங்கள்.! வாடிக்கையாளர் கவனத்திற்கு.!
ஹெச்டிஎப்சி வங்கி புதிய கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது. 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. அனைத்து கட்டணங்களுக்கும் கூடுதலாக 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள்
நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎப்சி வங்கி தனது லாக்கர் வாடகை கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதற்கான புதிய கட்டண விவரங்களையும் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்டிஎப்சி வங்கியில் லாக்கர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த மாற்றத்தை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
ஹெச்டிஎப்சி வங்கி அறிவிப்பு
புதிய கட்டண அமைப்பில் “மெட்ரோ பிளஸ்” என்ற புதிய நகர பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிக் கிளை அமைந்துள்ள நகரத்தின் வகை மற்றும் லாக்கரின் அளவைப் பொறுத்து ஆண்டு வாடகை நிர்ணயிக்கப்படும். இந்த அமைப்பில் மெட்ரோ பிளஸ், மெட்ரோ, நகர்ப்புறம், அரை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் போன்ற பிரிவுகள் அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன. மேலும், அனைத்து லாக்கர் கட்டணங்களுக்கும் கூடுதலாக 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
லாக்கர் வாடகை

மெட்ரோ பிளஸ் நகரங்களில் ஆண்டு லாக்கர் வாடகை
மிகச் சிறியது – ரூ.4,000
சிறியது – ரூ.7,500
நடுத்தரம் – ரூ.12,500
கூடுதல் நடுத்தரம் – ரூ.15,000
பெரியது – ரூ.20,000
மிகப் பெரியது – ரூ.40,000
மெட்ரோ நகரங்களில் ஆண்டு லாக்கர் வாடகை
மிகச் சிறியது – ரூ.3,300
சிறியது – ரூ.5,000
நடுத்தரம் – ரூ.10,500
கூடுதல் நடுத்தரம் – ரூ.12,500
பெரியது – ரூ.15,000
மிகப் பெரியது – ரூ.20,000
வங்கி லாக்கர் புதிய கட்டணம்
நகர்ப்புறம், அரை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் லாக்கர் வாடகை இதைவிட குறைவாக இருக்கும். குறிப்பாக கிராமப்புறங்களில் மிகச் சிறிய லாக்கர் ரூ.1,000 முதல் தொடங்கி மிகப் பெரிய லாக்கர் ரூ.8,000 வரை இருக்கும். எனவே லாக்கர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் புதிய கட்டணங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.