crude oil price : கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் சரிவு: தொடர்ந்து வீழ்ச்சி அடைய என்ன காரணம்?
உலகளவில் பொருளாதார மந்தநிலை வரும் என்ற அச்சத்தால், சர்வதேச சந்தையில் நேற்று கச்சா எண்ணெய் விலையில் கடும் சரிவு காணப்பட்டது. முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
உலகளவில் பொருளாதார மந்தநிலை வரும் என்ற அச்சத்தால், சர்வதேச சந்தையில் நேற்று கச்சா எண்ணெய் விலையில் கடும் சரிவு காணப்பட்டது. முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
பிரன்ட் கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில் செவ்வாய்கிழமை வர்த்தகத்தில் பிரன்ட் கச்சா எண்ணெய் மற்றும் வெஸ்ட் டெஸ்சாஸ் கச்சா எண்ணெயும் 100 டாலருக்கு கீழ் சரிந்தது. பின்னர் நேற்று மீண்டும் உயரத் தொடங்கியது. இருப்பினும், பொருளாதார மந்தநிலை குறித்த அச்சத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஊசலாட்டத்தில் இருந்து வருகிறது.
வருகிறது கார், வேன், லாரிகளுக்கான புதிய தரவரிசை: 2023 ஏப்ரலில் அறிமுகம்: விவரம் என்ன?
பிரன்ட் கச்சா எண்ணெய் விலை நேற்றைய வர்த்தகத்தில் பேரலுக்கு 1.33 டாலர் குறைந்து, 101.44 டாலராக சரிந்தது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் 3 டாலர் அதிகரித்த நிலையில் பின்னர் வீழ்ச்சி அடைந்தது.
அமெரிக்க டபிள்யு டிசி
அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ்இன்டர்மீடியேட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.80 டாலர் குறைந்து, 97.70 டாலராக வீழ்ச்சி அடைந்தது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் 2 டாலர் உயர்ந்து பின்னர் சரியத் தொடங்கியது.
கடந்த மார்ச் மாதத்துக்குப்பின் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும். ஏப்ரல் மாதத்துக்குப்பின் கச்சா எண்ணெய் விலையும் முதல்முறையாக 100 டாலருக்குக் கீழ் சரிந்துள்ளது.
ஹெல்த் முக்கியம்! 2022ம் ஆண்டின் சிறந்த மருத்துவக் காப்பீடு திட்டங்கள்: ஒரு பார்வை
விலை சரிய காரணம்என்ன
அமெரிக்க வங்கியான கோல்ட்மேன் சாஸ் வெளியிட்ட அறிக்கையில் “ உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம்தான் கச்சா எண்ணெய் விலையை குறைத்துவிட்டது. டாலர் மதிப்பு உயர்வதால் கச்சா எண்ணெய் விலையும் உயர வேண்டும் ஆனால், உயரவில்லை. மற்ற நாடுகளின் கரன்ஸிகளைவிட டாலர் மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத உயர்வை அடைந்துள்ளது.
ஆனால், கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சீனாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை, மீண்டும் லாக்டவுன் வரலாம் என்ற அச்சமும் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
2021-22ம் ஆண்டுக்கான பிஎப்(PF) வட்டி எப்போது கிடைக்கும்? எப்படி பேலன்ஸ் தெரிந்து கொள்வது?
அதுமட்டுமல்லாமல் நார்வேயில் உள்ள நார்வே எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தம், அதனால், எரிபொருள், எரிவாயு ஏற்றுமதி குறைப்பும் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.” எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், சிட்டி குரூப் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் கச்சா எண்ணெய் விலை பேரல் 65 டாலராகச் சரியும், 2023ம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் விலை பேரல் 45 டாலராக வீழ்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளது.
அதேநேரம், கடந்த வாரம் ஜேபி மோர்கன் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு ஒவ்வொருவரையும் அதிர்ச்சி அடையவைத்தது. அதாவது, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் தடையைத் தொடர்ந்து ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்தால், ஒரு பேரல் கச்சா எண்ணெய்விலை 380 டாலராக அதிகரிக்கும் என எச்சரித்தது.