Asianet News TamilAsianet News Tamil

spicejet:spicejet share: ஸ்பைஸ்ஜெட்டுக்கு கட்டம் சரியில்ல! பங்குமதிப்பு 7% வீழ்ச்சி:52 வாரங்களில் இல்லாத சரிவு

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் அடுத்தடுத்து பாதுகாப்பு குறைபாட்டில் சிக்கிய நிலையில், அந்தநிறுவனத்தின் பங்குமதிப்பு கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவு சரிந்து 7 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.

spicejet shares crash 7%: hits 52 weeks low:
Author
Mumbai, First Published Jul 6, 2022, 3:16 PM IST

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் அடுத்தடுத்து பாதுகாப்பு குறைபாட்டில் சிக்கிய நிலையில், அந்தநிறுவனத்தின் பங்குமதிப்பு கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவு சரிந்து 7 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.

பண்டமாற்றுக்கு மாறிய சீனா: பூண்டுக்கு ஒரு வீடு; தர்பூசணிக்கு ஒரு வீடு

கடந்த ஓர்ஆண்டுக்கு முன்பு இருந்த நிலையைப் போன்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 52 வாரங்களில் இல்லாத வகையில் ரூ.35ஆகக் குறைந்தது.

spicejet shares crash 7%: hits 52 weeks low:

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்றைய வர்த்தகத்தில் 2.33சதவீதம் சரிந்து, ரூ.37.65ஆகக் குறைந்தது. இன்று வர்த்தகம் தொடங்கியதும், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், ஒரு பங்கு மதிப்பு ரூ.37.10ஆகத் தொடங்கியது. ஆனால் நேரம் செல்லச் செல்ல ஸ்பைஸ்ஜெட் பங்கு மதிப்பு 2.66 சதவீதம் சரிந்து, ரூ.36.55 ஆகக் குறைந்து ரூ.35 ஆக வீழ்ச்சி அடைந்தது.

 ஸ்பைஸ்ஜெட்டுக்கு சிக்கல்: டிஜிசிஏ நோட்டீஸ்: 2 மாதத்தில் 7-வது பாதுகாப்பு குறைபாடு சம்பவம்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் டெல்லியிலிருந்து துபாய்க்கு நேற்று சென்றது. ஆனால், திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசரமாகத் தரையிறங்கியது. ஆனால் விசாரணையில் விமானத்தின் எரிபொருள் டேங்கரில் லேசான கசிவு இருந்துள்ளது. ஆனால், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்தெரிவித்தது.

spicejet shares crash 7%: hits 52 weeks low:

மற்றொரு சம்பவமாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் க்யூ400 டர்போபிராப் விமானம் குஜராத்தின் கான்ட்லாவிலிருந்து மும்பைக்கு சென்றது. அப்போது வின்ட்ஷீல்ட் பகுதியில் பறக்கும்போது நடுவானில் கீறல் ஏற்பட்டது. தரையிலிருந்து 23ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்தபோது வின்ட்ஷீல்ட் பகுதியில் பிளவு ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மட்டும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்தது.

spicejet shares crash 7%: hits 52 weeks low:

இதனிடையே இன்று காலை கொல்கத்தாவிலிருந்து ஸ்பைஸ்ஜெட்நிறுவனத்தில் சரக்கு விமானம் சீனாவுக்குப் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களில் வானிலை காரணமாக விமானம் மீண்டும் தரையிறங்கியது. கடந்த 18 நாட்களில் நடந்த 7-வது சம்பவம் இதுவாகும்.

தங்கம் விலை அதிரடி குறைவு: வெள்ளி விலை பெருவீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன?

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறால் சிக்கியதையடுத்து, பயணிகள் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாகக் கூறி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த சம்பவத்தால் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 2 நாட்களில் கடந்த ஓர் ஆண்டாக வைத்திருந்த மதிப்பை இழந்து 52 வாரங்களில் இல்லாத சரிவைச் சந்தித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios