Asianet News TamilAsianet News Tamil

Economic Survey 2022-23:இந்தியப் பொருளாதாரம் 6.5% வளர்ச்சி அடையும்: பொருளாதார ஆய்வறிக்கையின் அம்சங்கள் என்ன?

இந்தியப் பொருளாதாரம் 2023-24 நிதியாண்டில் 6.5 சதவீதம் வளர்ச்சி அடையும். உலகளவில் வேகமாகவளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இருக்கும் என்று 2022-23 பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Indian economy will rise 6.5% in the coming fiscal year: Economic Survey.
Author
First Published Jan 31, 2023, 3:12 PM IST

இந்தியப் பொருளாதாரம் 2023-24 நிதியாண்டில் 6.5 சதவீதம் வளர்ச்சி அடையும். உலகளவில் வேகமாகவளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இருக்கும் என்று 2022-23 பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல்நாளான இன்று இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

வந்துவிட்டது 'Union Budget App': பட்ஜெட்டை அறிவிப்பை மொபைல் செயலியில் பார்க்கலாம்

Indian economy will rise 6.5% in the coming fiscal year: Economic Survey.

இந்தியாவில் அதிகமாக பட்ஜெட் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் யார்? நிர்மலா சீதாராமன் எத்தனையாவது பட்ஜெட்?

பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ள அம்சங்கள் என்ன

  • 2023-24ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும். 
  • உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை இந்தியா கொண்டிருக்கும். உலக நாடுகள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களையும் சிறப்பாக இந்தியா கையாளும். 
  • கடந்த 2021-22 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.7% என மதிப்பிடப்பட்டது. நடப்பு நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு ஒப்பிடுகையில் அடுத்த நிதியாண்டு 6.5 சதவீமாகக் குறையும்
  • உலக நாடுகள் சந்திப்பதைப் போல் இந்தியாவும் நிதிச்சூழல் நெருக்கடியை எதிர்கொள்கிறது. ஐரோப்பாவில் நடக்கும் போரால் சப்ளையில் சிக்கல், ஆனாலும், சிறப்பான நிலையில் இந்தியா இருக்கிறது
  • வாங்கும் சக்தி அடிப்படையில் இந்தியாவின் பொருளதாரம் உலகளவில் 3வது இடத்திலும், அந்நியச் செலாவணி பரிமாற்ற அடிப்படையில் 5வது மிகப்பெரிய பொருளாதாரத்தையும் கொண்டுள்ளது.
  • பொருளாதாரம் இழந்ததை ஏறக்குறைய மீட்டெடுத்துள்ளது. கொரோனா பரவல், ஐரோப்பாவில் போர் ஆகியவற்றின்போதும் மெதுவாக இருந்த பொருளாதாரத்தை மீண்டும் உற்சாகப்படுத்தியுள்ளது.
  • பணவீக்கம் பற்றி பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. கடன் வாங்குவது சிறிது காலத்துக்கு செலவு கூடக்கூடியதாக இருக்கும். பணவீக்கத்தின் அழுத்தம் காரணமாக இந்த சூழல் சிறிது காலத்துக்கு இருக்கும்.
  • மூலதன முதலீடு அதிகரிப்பு, உள்நாட்டுத் தேவை அதிகரிப்பு போன்றவற்றால் வளர்ச்சி அதிகரித்து, கொரோனா பரவல் மந்தநிலையில் இருந்து இந்தியா வேகமாக மீண்டுள்ளது.
  • அமெரி்க்க பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தும்பட்சத்தில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மேலும் நெருக்கடிக்குள்ளாகும். 
  • உலகளாவிய பொருட்கள், கமாடிட்டி விலை  அதிகரித்து இருப்பதால், நடப்பு கணக்குப் பற்றாக்குறை அளவும் அதிகமாகவே இருக்கும். நடப்புக் கணக்குப்பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்தால், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்திக்கும். மற்றவகையில் வெளிப்புறச் சூழல் மேலாண்மை செய்யக்கூடிய அளவில் இருக்கிறது.
  • ஏற்றுமதியைப் பொறுத்தவரை நடப்பு நிதியாண்டின் 2வதுபகுதியில் சுமாராக இருக்கிறது. உலகளவில் பொருளாதார வளர்ச்சி குறைவு, ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்காததால்,  வர்த்தகம் சுருங்கியது.
  • 2023-24ம் ஆண்டில் பெயரளவு பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும். 
  • அதிகமான நுகர்வு இருப்தால், வேலைவாய்ப்புச் சூழலில் முன்னேற்றம் காணப்படுகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனியார் துறை முதலீடு அதிகரிப்பது அவசியம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

·  

Follow Us:
Download App:
  • android
  • ios