Asianet News TamilAsianet News Tamil

Income Tax Returns முதல் கிரெடிட் கார்டு மாற்றம் வரை.. ஆகஸ்ட் மாதம் நீங்கள் கவனிக்கவேண்டிய வங்கி வேலைகள்!

நடப்பு ஆண்டன 2023-24-க்கான ITR (Income Tax Return) காலக்கெடு வரும் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்பட்சத்தில் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

Income Tax Returns to Bank Holidays many Important Things that you should know about august 2023
Author
First Published Jul 28, 2023, 4:31 PM IST | Last Updated Jul 28, 2023, 4:31 PM IST

அதேநேரம் ITR காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல், இந்திய வருமான வரிச் சட்டம், 1961ன் பிரிவு 234Fன் கீழ், 5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.5,000 அபராதமும், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், மொத்த ஆண்டு வருவாய் ரூ. 5 கோடிக்கு மேல் உள்ள அனைத்து ஜிஎஸ்டி வரி செலுத்துவோருக்கும், மின்-விவரப்பட்டியலை (E-Invoicing) அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. அரசின் இந்த முடிவு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

IIT, IIM கல்வி இல்லை.. ரூ.12,000 கோடி Turnover! இந்தியாவின் பணக்கார கோழி விவசாயிகளின் வெற்றிக்கதை..

வங்கி விடுமுறை நாட்கள் 

இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டரின்படி, ஆகஸ்ட் 2023ல், வரும் ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உட்பட 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். இந்த 14 நாட்கள் என்பது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தை விடுமுறைகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி, இந்திய பங்குச்சந்தை மூடப்படும். வழக்கமான வார விடுமுறையைத் தவிர (சனி மற்றும் ஞாயிறு) மீதமுள்ள நாட்களில் சந்தைகள் திறந்திருக்கும்.

ஆக்சிஸ் பேங்க் Flipkart கிரெடிட் கார்டு  

ஆக்சிஸ் பேங்க், அதன் Flipkart இணை பிராண்டட் கிரெடிட் கார்டின் பலன்களை வரும் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் குறைக்கவுள்ளது. அதாவது, இப்போது, ​​Flipkart மற்றும் Myntra ஆகியவற்றில் நீங்க செலவழித்தால், உங்களுக்கு 5 சதவீத ​கேஷ்பேக்கு மாற்றாக வெறும் 1.5 சதவீதம் கேஷ்பேக் மட்டுமே கிடைக்கும். மேலும், எரிபொருள் செலவு, ஃபிளிப்கார்ட் மற்றும் மைந்த்ராவில் கிஃப்ட் கார்டுகளை வாங்குதல், மற்றும் சில வகை சேவைகளில் கேஷ்பேக் கிடைக்காது.

இந்தியாவின் செமிகண்டக்டர் திட்டம்: ரூ.1000 கோடி முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios