Asianet News TamilAsianet News Tamil

RBI hiked Repo Rate: ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை கூட்டம்: அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன?

ரிசர்வ் வங்கியின் நதிக்கொள்கைக் கூட்டத்தில், கடனுக்கான வட்டி விகிதம் 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது, இதன் மூலம் வட்டி 6.50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Important points from the RBI's monetary policy announcement
Author
First Published Feb 8, 2023, 1:36 PM IST

ரிசர்வ் வங்கியின் நதிக்கொள்கைக் கூட்டத்தில், கடனுக்கான வட்டி விகிதம் 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது, இதன் மூலம் வட்டி 6.50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நாட்டின் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்தையும் கடந்து 10 மாதங்களாக அதிகரித்தது. இதையடுத்து, கடந்த மே மாதத்தில் இருந்து ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தி வருகிறது.

ரெப்போ வட்டி விகிதம் 25 புள்ளிகள் உயர்வு: EMI அதிகரிக்கும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Important points from the RBI's monetary policy announcement

இதுவரை ரிசர்வ் வங்கி 225 புள்ளிகள் வட்டியை உயர்த்தியுள்ளது. கடனுக்கான வட்டி 4 சதவீதமாக இருந்தநிலையில் தற்போது 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பரில் ரிசர்வ் வங்கி வட்டியை 35  புள்ளிகள் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. 

ரிசர்வ் வங்கியின் 6 உறுப்பினர்கள் கொண்ட நிதிக்கொள்கைக் குழு கடந்த 2 நாட்களாக மும்பையில் ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையின் முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார். 

நிதிக்கொள்கைக் கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்

1.    கடனுக்கான வட்டி விகிதம் 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டு, வட்டி 6.50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2.    கடந்த ஆண்டு மே மாதத்தில்இருந்து தொடர்ந்து 6வது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது.

3.    2023-24ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டின் முந்தைய கணிப்பான 7 சதவீதத்தைவிட குறைவாகும்

4.    2023-24ம் நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் 5.3 சதவீதமாகக் குறையும். நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் சராசரியாக 6.5 சதவீதமாக இருக்கும். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்தைவிடவும், சராசரி அளவான 4 சதவீதத்தைவிடவும் அதிகமாகும்.

Important points from the RBI's monetary policy announcement

அதானி மகன், முகேஷ் அம்பானி மகனுக்கு புதிய பதவி: மகாராஷ்டிரா அரசு உத்தரவு

5.    கச்சா எண்ணெய் விலை உயர்வு, புவிஅரசியல் சார்ந்த பதற்றங்களால் பணவீக்கத்தின் அளவு இந்தியாவில் அதிகரித்துள்ளது.

6.    இந்தியப் பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கிறது. ராபி பருவத்தில் அதிக ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ளது. கடன் வழங்குதல் அதிகரித்துள்ளது. 2324ம் ஆண்டு பட்ஜெட்டில் மூதலீட்டு வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

7.    நடப்பு நிதியாண்டில் அக்டோபர் முதல் மார்ச் வரையில் நடப்புக் கணக்குப்பற்றாக்குறை மிதமாகவே இருக்கிறது, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 3.3 சதவீதமாகஇருந்தது. 

8.    இந்தியாவின் அந்நியச்செலாவணி கையிருப்பு 5768 கோடி டாலர் கடந்த மாதம் 27ம் தேதி நிலவரப்படி உள்ளது. 9 மாதங்களுக்கான இறக்குமதி கையிருப்பு இருக்கிறது.

9.    2022ம் ஆண்டில் ஆசியப் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளின் கரன்சிகள் கடுமையான மதிப்புக் குறைபாட்டை எதிர்கொண்டநிலையி்ல் அதில் அதிக பாதிப்படையாமல் ஸ்திரமாகஇருந்தது இந்திய ரூபாய் மதிப்புதான். இந்த ஆண்டிலும் அந்த நிலை தொடரும்.

10.    இந்தியாவுக்குள் வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் யுபிஐ செயலியைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்

Important points from the RBI's monetary policy announcement

அதானி குழுமத்துக்கு ரூ.5,400 கோடி போச்சு! டெண்டரை ரத்து செய்தது உத்தரப் பிரதேச பாஜக அரசு

11.    12 நகரங்களில் பிரசோதனை முயற்சியில் கியூஆர்கோட் அடிப்படையிலான நாணயங்கள் வழங்கும் எந்திரம் நிறுவப்படும்.

12.    ஏப்ரல் 3 முதல் 6ம் தேதிவரை நிதிக்கொள்கைக் கமிட்டியின் அடுத்த கூட்டம் நடைபெறும்

Follow Us:
Download App:
  • android
  • ios