Adani Son: அதானி மகன், முகேஷ் அம்பானி மகனுக்கு புதிய பதவி: மகாராஷ்டிரா அரசு உத்தரவு
மகாராஷ்டிரா அரசை ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றும் பொருளாதார ஆலோசனைக் குழுவில் கெளதம் அதானியின் மகன் கரண் அதானி, முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மகாராஷ்டிரா அரசை ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றும் பொருளாதார ஆலோசனைக் குழுவில் கெளதம் அதானியின் மகன் கரண் அதானி, முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். கரண் அதானி, அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார்.
அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த மோசடிகள், தில்லுமுல்லுகள் குறித்து அமெரிக்க ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கைக்குப்பின் அதானி நிறுவனம் ஆட்டம் கண்டு பங்குகள் விலைசரிந்தன. ஏறக்குறைய ரூ.10 லட்சம் கோடிஇழப்பு ஏற்பட்டது.
அதானி குழுமத்துக்கு எட்டே நாளில் ரூ.10 லட்சம் கோடி பனால்!
இந்தசூழலுக்கு மத்தியில் அதானியின் மகனை மகாராஷ்டிரா அரசு பொருளாதார ஆலோசனைக் குழுவில் நியமித்துள்ளது.ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறவனத்தின் இயக்குநராகஇருக்கும் ஆனந்த் அம்பானியும் 21 உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா அரசுவெளியிட்ட அறிவிப்பில் “ மகாராஷ்டிரா அரசை ஒருலட்சம் டாலர் கொண்ட பொருளாதார மாற்ற இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு ஆலோசனைகள் வழங்க, 21 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் குழு தன்னாட்சிமிக்கது.
அரசின் பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் ஆலோசனை வழங்குவார்கள். ஜவுளித்துறை, மருந்துத்துறை,துறைமுகம், வங்கி, வேளாண்மை, பொறியியல், உற்பத்தித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்தும் வல்லுநர்களை குழுவில் நியமித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்துக்கு ரூ.5,400 கோடி போச்சு! டெண்டரை ரத்து செய்தது உத்தரப் பிரதேச பாஜக அரசு
இந்த பொருளாதார ஆலோசனைக் குழு, அரசுக்கு நிதி சார்ந்த, கொள்கை சார்ந்த ஆலோசனைகளை வழங்கும், பேரியியல் பொருளாதாரகூறுகளான வேலைவாய்ப்பு, வளர்ச்சி, உள்ளிட்டவற்றில் ஆலோசனை வழங்குவார்கள்.
மேலும் இந்த குழுவில், சஞ்சீவ் மேத்தா(எச்யுஎல் தலைவர்),எஸ்என் சுப்பிரமணியன்(லார்சன்அன்ட்டூப்ரோ சிஇஓ), மிலிந்த் காம்ப்ளே, அஜித் ராண்டே(துணைவேந்தர்), ஐஏஎஸ் அதிகாரிகளான ஓபி. குப்தா(நிதித்துறை செயலாளர்), ஹர்ஸ்தீப் காம்ப்ளே(தொழில்துறை செயலாளர்), ராஜகோபால் தேவ்ரா(திட்டமிடுதல் செயலாக்கப்பிரிவு) ஆகியோர் உள்ளனர்.