Adani Group: அதானி குழுமத்துக்கு எட்டே நாளில் ரூ.10 லட்சம் கோடி பனால்!
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு கடந்த 8 நாட்களில் 10 லட்சம் கோடி ரூபாய் சரிந்துள்ளது.
அண்மையில் வெளியான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து எட்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளன.
அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கை கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியானது. அதற்கு முன்பு, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ரூ.19.2 லட்சம் கோடியாக இருந்தது.
இதுவே சென்ற வெள்ளிக்கிழமை பங்கு வர்த்தகம் முடிவந்தபோது ரூ.9.3 லட்சம் கோடியாகக் குறைந்துவிட்டது. திங்கள்கிழமை வர்த்தகம் மீண்டும் தொடங்கியபோதும் சரிவுப் போக்கு நீடித்தது. வர்த்தகம் முடியும்போது ரூ.31 ஆயிரம் கோடி வீழ்ச்சியுற்றது. இதனால், அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 8 நாட்களில் ரூ.10 லட்சம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளன.
Gold Rate Today: ஏற்றத்தில் தங்கம் விலை! மீண்டும் சவரன் ரூ.43ஆயிரத்தை நெருங்குகிறது
கெளதம் அதானி சொத்துகளின் நிகர மதிப்பு 60 பில்லியன் டாலர்கள் அளவு குறைந்திருக்கிறது. இதனால் ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் அதானி 21வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
அதானி குழுமத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த சரிவால் சர்வதேச நிதி நிறுவனங்கள் அதானி குழுமத்துடன் கொண்ட வணிகத் தொடர்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடிவுக்கு வந்துள்ளன.
இதனிடையே நாடாளுமன்றத்தில் அதானி குழும விவகாரம் குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
ஏழைகளின் நலனை மையமாக வைத்தே பட்ஜெட் தாக்கல்: பிரதமர் மோடி பேச்சு