Asianet News TamilAsianet News Tamil

ஏடிஎம்மில் இனி ரூ.5 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால்... உங்கள் பணம் கொள்ளை போகலாம்...!

ஏடிஎம்மில் இனி 5,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தாலே, கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
 

If you withdraw more than Rs 5,000 at an ATM ... your money may be robbed ...!
Author
Tamil Nadu, First Published Oct 20, 2020, 12:14 PM IST

ஏடிஎம்மில் இனி 5,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தாலே, கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

பொதுவாக, நமது வங்கிக் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலமாகப் பணம் எடுப்பதற்குக் குறிப்பிட்ட அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது வங்கியைப் பொறுத்து கட்டணங்கள் மாறுபடும். அதே வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்தால் இத்தனை முறை இலவசம் என்றும், அதைத் தாண்டி பணம் எடுக்கும்போது கட்டணம் வசூலிக்கும் நடைமுறை செயல்பாட்டில் இருக்கிறது. ஆனால், இனி நீங்கள் 5,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தாலே கட்டணம் வசூலிக்கப்படும் என்ற நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. இது உங்களது ஐந்து இலவசப் பரிவர்த்தனைகளில் சேர்க்கப்படாது.

If you withdraw more than Rs 5,000 at an ATM ... your money may be robbed ...!

புதிய விதிமுறைப்படி, நீங்கள் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.5,000 எடுத்தால் மட்டுமே இது பொருந்தும். நீங்கள் ஒரு நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் 24 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். தற்போது, ஏடிஎம்மில் இருந்து ஐந்து முறை நீங்கள் இலவசமாகப் பணம் எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர் ஆறாவது பரிவர்த்தனைக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். ஏடிஎம் கட்டணம் தொடர்பாக மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி குழு அதன் பரிந்துரைகளைத் தற்போது சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் வங்கிகள் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏடிஎம் கட்டணத்தை மாற்றலாம்.

10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை உள்ள நகரங்களில் ஏடிஎம் பரிவர்த்தனைகளை அதிகரிப்பது குறித்து இந்தக் குழு வலியுறுத்தியுள்ளது. பெரும்பாலான மக்கள் இங்கு சிறிய தொகையை மட்டுமே ஏடிஎம்களில் எடுக்கின்றனர். எனவேதான் ரூ.5,000க்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இப்போது சிறிய நகரங்களில் ஐந்து முறை மட்டுமே இலவசமாகப் பணம் எடுக்க முடியும். புதிய பரிந்துரையின்படி, சிறு நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் ஒவ்வொரு மாதமும் ஆறு முறை பணம் எடுக்க சலுகை கிடைக்கும்.If you withdraw more than Rs 5,000 at an ATM ... your money may be robbed ...!

மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் மூன்று முறை ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு நான்காவது முறையாகப் பணம் எடுத்தால் அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios