Huawei india: ஹூவாய் நிறுவனமும் சிக்குகிறது? ரூ.750 கோடிக்கு கணக்கு கேட்கும் வருமானவரித்துறை
சீனாவைச் சேர்ந்த விவோ செல்போன் நிறுவனம் இந்தியாவிலிருந்து தனது விற்று முதல் ரூ.62 ஆயிரம் கோடியை சீனாவுக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், வருமானவரித்துறை வளையத்தில் தற்போது ஹூவாய் நிறுவனமும் சிக்கியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த விவோ செல்போன் நிறுவனம் இந்தியாவிலிருந்து தனது விற்று முதல் ரூ.62 ஆயிரம் கோடியை சீனாவுக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், வருமானவரித்துறை வளையத்தில் தற்போது ஹூவாய் நிறுவனமும் சிக்கியுள்ளது.
அய்யோ! அந்த ப்ளைட்டா! ஸ்பைஸ்ஜெட்டை கண்டு தெறித்து ஓடும் பயணிகள்
விவோ செல்போன் நிறுவனம் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக புகார்கள் வரவே, கடந்த சில நாட்களுக்கு முன், அந்தநிறுவனத்துக்குச் சொந்தமான 44 இடங்களில் அமலாக்கப்பிரிவுஅதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
இந்த ரெய்டில், விவோ நிறுவனத்துக்கு சொந்தமான 119 வங்கிக்கணக்குகள் இருப்பதும், அதில் மொத்தமாக ரூ.465 கோடி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வைப்பு நிதியாக ரூ.66 கோடி, தங்கக் கட்சிகளாக ரூ.73 லட்சம் மதிப்பில் 2 கிலோ இருந்ததை சட்டவிரோதப் பணப்பரிமாற்றச்சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவினர் முடக்கினர்.
சித்ராவுக்கு சோதனைக்கு மேல் சோதனை! சிக்கினார் சஞ்சய்: சிபிஐ புதிய வழக்கு:
விவோ செல்போன் நிறுவனம் தனது விற்றுமுதலில் 50 சதவீதத்தை அதாவது, 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுவரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டு ரூ.62ஆயிரத்து 476 கோடியை சீனாவுக்கு திருப்பியுள்ளது. இதற்கு இந்தியாவைச் சேர்ந்த 18 நிறுவனங்கள் துணையாக இருந்துள்ளன.
இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான ஹூவாய் இந்தியாவும், தனது தாய் நிறுவனத்துக்கு ரூ.750கோடியை கடந்த 2 நிதியாண்டுகளில் அனுப்பியதை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்து குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்திய அரசிடம் வரிசெலுத்துவதை குறைப்பதற்காக தனது டிவின்ட்பெயரி்ல் தொகையை சொந்த நாட்டுக்கு ஹூவாய் நிறுவனம் அனுப்பியுள்ளது. ஹூவாய் நிறுவனம் வருமானம் குறைந்த நிலையிலும் பணத்தை அனுப்பியுள்ளது என வருமானவரித்துறையினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
ஹூன்ஹூன்வாலாவின் ‘ஆகாஸா ஏர்’ விமானம் டேக்ஆஃப் தொடங்குது! டிஜிசிஏ ஒப்புதல்
இது தொடர்பாக விசாரணை நடத்திய வருமானவரித்துறையினர் ஹூவாய் நிறுவனத்தில் சோதனை நடத்தியபோது ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றினர்.அதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் ஹூவாய் நிறுவனத்தின் வங்கிக்கணக்கை முடக்கினர்.
வருமானவரித் துறைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த, ஹூவாய் இந்தியா நிறுவனம், தங்களின் வங்கிக்கணக்க முடிக்கியதால், வர்த்தகம் பாதிப்பதாகத் தெரிவித்தது.
யார் இந்த பின் லூ? எஸ்கேப் ஆன விவோ இயக்குநர்கள்: தோண்ட, தோண்ட புதுத்தகவல்கள் அம்பலம்
இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் ஹூவாய் இந்தியா நிறுனத்தின் வங்கிக்கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியதை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.
இதற்கு வருமானவரித்துறை சார்பிலும் விரிவான பதில் மனுவும், குற்றச்சாட்டு குறித்த புதிய ஆதாரங்களையும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.