Asianet News TamilAsianet News Tamil

vivo ed raid: யார் இந்த பின் லூ? எஸ்கேப் ஆன விவோ இயக்குநர்கள்: தோண்ட, தோண்ட புதுத்தகவல்கள் அம்பலம்

சீனாவின் விவோ செல்போன் நிறுவனத்தின் முக்கிய இயக்குநரான பின் லூ, கடந்த 2018ம் ஆண்டே இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும், மேலும் இரு இயக்குநர்கள் கடந்த ஆண்டு தப்பிச் சென்றதாக அமலாக்கப்பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது.

ED raid on vivo: Who is this pin loo? Escaped Vivo india directors: new information revealed
Author
New Delhi, First Published Jul 8, 2022, 11:33 AM IST

சீனாவின் விவோ செல்போன் நிறுவனத்தின் முக்கிய இயக்குநரான பின் லூ, கடந்த 2018ம் ஆண்டே இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும், மேலும் இரு இயக்குநர்கள் கடந்த ஆண்டு தப்பிச் சென்றதாக அமலாக்கப்பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது.

விவோவின் மெகா மோசடி! ரூ.62 ஆயிரம் கோடியை சீனாவுக்கு திருப்பியது அம்பலம்:அமலாக்கப்பிரிவு பகீர்

ED raid on vivo: Who is this pin loo? Escaped Vivo india directors: new information revealed

ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்ட மல்டி அகார்டு லிமிட்டட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக கடந்த 2014ம் ஆண்டு விவோ நிறுவனம் தொடங்கப்பட்டது. விவோ நிறுவனத்தை இந்தியக் கணக்குத் தணிக்கை அதிகாரி நிதின் கார்க் உதவியுடன், ஹெங்ஷென் வூ, பின் லூ, ஹாங் ஜி ஆகியோர் உருவாக்கினர். அப்போது இருந்து ஏறக்குறைய 18 துணை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

அதில் விவோ நிறுவனத்தின் முக்கியத் துணை நிறுவனமாக கிராண்ட் பிராஸ்பக்ட் இன்டர்நேஷனல் கம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடட் உருவாக்கப்பட்டது. இந்தநிறுவனத்தின் இயக்குநராக பின் லூ செயல்பட்டார். 

9-வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்: அலுவலக சிஓவுடன் இரட்டை குழந்தை

இந்நிலையில் கிராண்ட் பிராஸ்பக்ட் இன்டர்நேஷனல் கம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடட் நிறுவனம் போலியான ஆவணங்கள், முகவரிகளை அளித்து நிறுவனத்தை தொடங்கியுள்ளது என்று மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. 

ED raid on vivo: Who is this pin loo? Escaped Vivo india directors: new information revealed

போலீஸார் நடத்திய விசாரணையில் கார்ப்பேரட் விவகாரத்துறை புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. அரசாங்க கட்டிடத்தை காண்பித்தும், ஆவணங்களாக் காண்பித்தும் நிறுவனத்தை கிராண்ட் பிராஸ்பக்ட் தொடங்கியுள்ளது அதுமட்டுமல்லாமல் முகவரிச் சான்றாக, மத்தியஅரசின்  மூத்த திகாரியின் வீட்டு முகவரியை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த புகாரை முகாந்திரமாகப் பயன்படுத்தி, அமலாக்கப்பிரிவு விசாரணையில் ஈடுபட்டது.அந்த விசாரணையில் விவோ நிறுவனம், தனது துணை நிறுவனங்கள் மூலம் தனது முதலீட்டில் 50 சதவீதத்தை தனது சொந்த நாட்டுக்கு கடத்திவிட்டதும், வரி ஏய்ப்பு செய்ததும் தெரியவந்தது.

ED raid on vivo: Who is this pin loo? Escaped Vivo india directors: new information revealed

விவோ நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான பின் லூ கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதமே இந்தியாவைவிட்டு தப்பிவிட்டார். மற்ற இரு இயக்குநர்களான ஹெங்ஷென் வூ, ஹாங் ஜி ஆகியோர் 2021ம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிவிட்டனர்.  

இதில் கிராண்ட் பிராஸ்பக்ட் இன்டர்நேஷனல் கம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர் பின் லூ. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஏராளமான நிறுவனங்களை பின் லூ நடத்தியுள்ளார்.

கோதுமைக்கு மட்டுமல்ல, கோதுமை மாவு ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகள்: மத்திய அரசு திடீர் முடிவு

அகமதாபாத்தில் ரூய் சாங் டெக்னாலஜிஸ், ஹைதராபாத்தில் வி ட்ரீம் டெக்னாலஜி அன்ட் கம்யூனிகேஷன், லக்னோவில் ரிஜென்வோ மொபைல், சென்னையில் பேங்ஸ் டெக்னாலஜி, பெங்களூருவில் விவூ கம்யூனிகேஷன், ஜெய்பூரில் புபாகோ கம்யூனிகேஷன், டெல்லியில் ஹாய்செங் மொபைல், மும்பையில் ஜாயின்மே மும்பை எலெக்ட்ரானிக்ஸ், கொல்கத்தாவில் யிங்ஜியோ கம்யூனிகேஷன் ஆகிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டன


 

Follow Us:
Download App:
  • android
  • ios