spicejet:spicejet share: அய்யோ! அந்த ப்ளைட்டா! ஸ்பைஸ்ஜெட்டை கண்டு தெறித்து ஓடும் பயணிகள்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த சில நாட்களாக நடுவானில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடு பிரச்சினைகளைச் சந்தித்ததையடுத்து, அந்த விமானத்தில் பயணிப்பதை தவிர்க்கும் முடிவில் பயணிகள் இறங்கியுள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

Passengers are start to shun SpiceJet after safety lapses

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த சில நாட்களாக நடுவானில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடு பிரச்சினைகளைச் சந்தித்ததையடுத்து, அந்த விமானத்தில் பயணிப்பதை தவிர்க்கும் முடிவில் பயணிகள் இறங்கியுள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 3 பாதுகாப்பு குறைபாடுகளை எதிர்கொண்டு கடும் விம்சனத்துக்குள்ளானது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியது.

Passengers are start to shun SpiceJet after safety lapses

டெல்லியிலிருந்து துபாய்க்கு நேற்று சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில்  தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசரமாகத் தரையிறங்கியது. மற்றொரு சம்பவமாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் க்யூ400 டர்போபிராப் விமானம் குஜராத்தின் கான்ட்லாவிலிருந்து மும்பைக்கு சென்றது. அப்போது வின்ட்ஷீல்ட் பகுதியில் பறக்கும்போது நடுவானில் கீறல் ஏற்பட்டது. 
இதனிடையே கொல்கத்தாவிலிருந்து ஸ்பைஸ்ஜெட்நிறுவனத்தில் சரக்கு விமானம் சீனாவுக்குப் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களில் வானிலை காரணமாக விமானம் மீண்டும் தரையிறங்கியது. கடந்த 18 நாட்களில் நடந்த 7-வது சம்பவம் இதுவாகும்.

இந்நிலையில் லோக்கல்சர்க்கில்ஸ் என்ற நிறுவனம் பயணிகளின் விமானநிறுவனங்கள் குறித்து சர்வே நடத்தியது. இதில் 21 ஆயிரம் பயணிகள் பங்கேற்றனர். இந்த ஆய்வில் சமீபத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் பாதுகாப்பு குறைபாடுகளைச் சந்தித்ததால், அந்த விமானத்தில் பயணிப்பதை தவிர்ப்பதாக 44 சதவீதப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Passengers are start to shun SpiceJet after safety lapses

ஏர்இந்தியா விமானத்தை 21 சதவீதம் பேரும், இன்டிகோ விமானத்தை 18 சதவீதம் பேர் தவிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 37 சதவீதம் பேர் எந்த விமானத்தையும் தவிர்க்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, பாதுகாப்பு குறைபாடுகளால் பயணிகளை இழப்பது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். கடந்த 3 நிதியாண்டுகளாக தொடர்ந்து இழப்பில் சென்று வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டில் மட்டும் 43 சதவீதம் மதிப்பை இழந்துள்ளன. ஆசியாவில் உள்ள விமானநிறுவனங்களின் பங்குகளிலேயே மிக மோசமான பங்காக ஸ்பைஸ்ஜெட் பங்கு இருக்கிறது.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios