பேங்க் பேலன்ஸ் செக் பண்ண கஷ்டமா? இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா போதும் - முழு விபரம் இதோ !!
பேங்க் பேலன்ஸ் சரிபார்ப்பது பலருக்கும் சிரமமாக உள்ளது. ஆனால் உண்மையில் வங்கி கணக்கில் இருப்பில் உள்ள தொகையை சரிபார்ப்பது எளிதான விஷயம். அது எப்படி என்று முழுமையாக காண்போம்.
இப்போதெல்லாம் நம்மில் பலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் உள்ளன. மற்ற எல்லா விஷயங்களையும் நிர்வகிக்கும் நேரம் குறைவாக உள்ளது என்பதும் உண்மை. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் இருப்புத் தொகையை அதாவது, உங்கள் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்று நீங்கள் அறிய விரும்பினால், வங்கிகள் அனைவருக்கும் எளிதாக்கியுள்ளன.
உங்கள் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுத்து உங்கள் வங்கி இருப்பைச் சரிபார்க்கலாம்.சில நிமிடங்களில் வங்கி இந்த விவரங்களை SMS மூலம் உங்களுக்கு அனுப்பும். கீழ்க்கண்டவற்றில் அனைத்து வங்கிகளின் மொபைல் எண்கள் தரப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் வங்கி : 1800-419-5959
பேங்க் ஆஃப் பரோடா : 919223011311
தன் லக்ஷ்மி வங்கி : 918067747700
ஐடிபிஐ வங்கி : 1800-843-1122
கோடக் மஹிந்திரா வங்கி : 1800-274-0110
PNB : 1800-180-2222
ஐசிஐசிஐ வங்கி : 02230256767
HDFC வங்கி : 1800-270-3333
பேங்க் ஆஃப் இந்தியா : 02233598548
கனரா வங்கி : 919015483483
கர்நாடக வங்கி : 1800-425-1445
இந்தியன் வங்கி : 919289592895
யெஸ் வங்கி : 919223920000
கரூர் வைஸ்யா வங்கி : 919266292666
சரஸ்வத் வங்கி : 919223040000
பந்தன் வங்கி : 1800-258-8181
RBL வங்கி : 1800-419-0610
DCB வங்கி : 917506660011
குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வங்கி எண்கள் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. ஆனால் வங்கிகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். நீங்களும் சரிபார்க்க வேண்டும்.
இந்த தொகையை விட அதிகமாக பணம் வைத்திருந்தால் அவ்ளோதான்.. ஐடி ரெய்டு உறுதி - எவ்ளோ தெரியுமா.?