ரயிலில் லோயர் பெர்த் கிடைக்கனுமா? டிக்கெட் புக் பண்ணும் போது இந்த ட்ரிக் யூஸ் பண்ணுங்க!
Train Ticket Booking Tricks : ரயிலில் லோயர் பெர்த் கிடைக்க டிக்கெட் புக் பண்ணும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய ரயில்வே அமைப்புகளில் ஒன்று இந்திய ரயில்வே ஆகும். இது தினமும் ஆயிரக்கணக்கான ரயில் சேவைகளை மக்களுக்காக வழங்குகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் தான் பயணம் செய்கிறார்கள் சொல்லப்போனால் பஸ், கார், விமானம் போன்றவற்றை விட ரயிலில் தான் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ரயிலில் டிக்கெட் செலவு மிகவும் குறைவு. இது தவிர மக்கள் செளகரியமாக இதில் பயணம் செய்யலாம்.
ரயில் பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்க ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். பொதுவாக ரயில்வே நிறுவனம் செய்து வரும் வசதிகள் குறித்து பயணிகளுக்கு அதிகம் தெரிவதில்லை. அதனால் தான் பலரால் அவற்றை பயன்படுத்த முடியாமல் போகின்றது.
அந்தவகையில், இப்போதெல்லாம் ரயில் பயணிகள் பயணம் செய்வதற்கான முன்பதிவு டிக்கெட் செயல்முறையானது முன்பை விட இப்போது மிகவும் எளிதாகப்பட்டுள்ளது. அதாவது, மக்கள் நடைமேடையில் வரிசையில் நின்று டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக டிக்கெட்டை சுலபமாக முன்பதிவு செய்யலாம். அதுவும் ஐஆர்சிடிசி மூலமாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பலர் டிக்கெட்டை முன்பதிவு செய்கின்றனர்.
பொதுவாக நாம் ரயிலில் டிக்கெட் புக் செய்யும் போது அவற்றில் வெவ்வேறு பெட்டிகள் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதாவது லோயர் பெர்த், நடுத்தர பெர்த் மற்றும் மேல் பெர்த் என்று இருக்கும். அவை அனைத்திற்கும் ஏற்றார் போல டிக்கெட் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். பெரும்பாலான மக்கள் லோயர் பெரத் தான் வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதாக கிடைக்காது. அது ஏன் தெரியுமா?
இதையும் படிங்க: ரயில் டிக்கெட்டை இனி டக்குன்னு எடுக்கலாம்.. ஐஆர்சிடிசியை விடுங்க.. இது போதும்!
லோயர் பெரத்
இந்திய ரயில்வே விதிகளின்படி, லோயட் பெர்த் ஊனமுற்றோர், மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியவற்றோருக்கு மட்டுமே முதல் முன்னுரிமை வழங்கப்படும். இதனால் தான் அந்த சீட் எல்லாருக்கும் கிடைப்பதில்லை.
இருப்பினும் இங்கே ஒரு நிபந்தனை உள்ளது. ஒரு மூத்த குடிமகன் தனியாக பயணம் செய்யும் போது அல்லது இரண்டு மூத்த குடிமக்கள் ஒன்றாக பயணம் செய்த போது மட்டுமே குறைந்து இருக்கை ஒதுக்கீடு கிடைக்கும். இரண்டுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஒன்றாக பயணம் செய்தால் கீழ் இருக்கைகள் முன்பதிவு செய்வது பொருந்தாது. மூத்துக்குடி மக்களுக்கு மேல் அல்லது நடுத்தர பெர்த் இருந்தால் TC-யைக் கேட்டு அதை மாற்றுவதற்கான விருப்பம் உள்ளது.
இதையும் படிங்க: மூத்த குடிமக்களுக்கு ரயிலில் லோயர் பெர்த் டிக்கெட் புக் செய்வது எப்படி?
லோயர் பெர்த் கிடைக்க
மூத்த குடிமக்கள் ஊனமுற்றோர் கர்ப்பிணிகளுக்கு லோயர் பெர்த் முன்னுரிமை அளிப்பதால் நீங்கள் இந்த மூன்று வகைகளில் இல்லை என்றால், நீங்கள் டிக்கெட் புக்கிங் செய்யும்போது உங்களுடைய சீட்டு முன்னுரிமையில் லோயர் பெரத் என்று தேர்வு செய்யுங்கள். மற்ற பயணிகள் முன்பதிவு செய்தது ரத்து செய்தாலோ அல்லது வரவில்லை அந்த சீட் உங்களுக்கு ஒதுக்கப்படலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D