நிஃப்டியின் சிறு நடுத்தர நிறுவனங்கள் பங்குகளில் அதிரடி காட்டிய கிரீன்செஃப் அப்ளையன்சஸ்!!
கிரீன்செஃப் அப்ளையன்சஸ் லிமிடெட் பங்குகள் நிஃப்டியின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பரிமாற்றத்தில் வியாழக்கிழமை பிரீமியத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. பங்கு ஒன்றுக்கு ரூ. 104 என பட்டியலிடப்பட்டது. இது நிஃப்டியின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பரிமாற்றத்தின் வெளியீட்டு விலையான ரூ. 87 ஐ விட 19.5 சதவீதம் அதிகமாகும்.
கிரீன்செஃப் அப்ளையன்சஸ் பங்குகள் மதிப்பு அதிகரித்து மற்றும் ரூ. 109.20-ல் 5 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து காணப்பட்டது. Greenchef Appliances நிறுவனம் ஒரு பங்கின் விலையை ரூ. 82 மற்றும் ரூ. 87 என்ற வரம்பில் நிர்ணயித்து இருந்தது. ஐபிஓவிற்கான காலம் ஜூன் 23ஆம் தேதி தொடங்கி ஜூன் 27ஆம் தேதி முடிவடைந்தது.
ஐபிஓ வெளியான 3 ஆம் நாளில், நிறுவனம் அல்லாத ஏலதாரர்களிடமிருந்து (NII) இந்த வெளியீடு நல்ல வரவேற்பைப் பெற்றது. அதாவது 96.01 முறை பங்குகள் விற்பனை அதிகரித்துக் காணப்பட்டது. chittorgarh.com தரவுகளின்படி, சில்லறை விற்பனையில் 62.63 மடங்கு பங்குகள் விற்கப்பட்டது தெரிய வந்துள்ளது. மற்றும் தகுதியான நிறுவன தரகர்கள் முறையே இந்தப் பங்குகள் 17.11 மடங்கு அதிகரித்துக் காணப்பட்டது. இறுதி நாளில் 44.89 முறை அதிகரித்துக் காணப்பட்டது.
இனிஷியல் பப்ளிக் ஆஃபர் முறையில் சுமார் 61.63 லட்சம் பங்குகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பங்குகள் விற்பனை மூலம் ரூ. 53.62 கோடி நிதி திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐபிஓ மூலம், அதாவது பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், புதிய ஆலை மற்றும் இயந்திரங்களை நிறுவுதல், உற்பத்திக்கான தளத்தை உருவாக்குதல், பணி மூலதனத் தேவைகள் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரீன்செஃப் என்ற பிராண்ட் பெயரில், நிறுவனம் ஏராளமான சமையலறை உபகரணங்களைத் தயாரித்து சந்தைப்படுத்துகிறது. கிரீன்செஃப் நிறுவனம் கேஸ் அடுப்புகள், பிரஷர் குக்கர்கள், மிக்சி கிரைண்டர்கள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது.
தகுதியான நிறுவன தரகர்களுக்கு என்று 50% பங்கையும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு 15% மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு 35% பங்குகளையும் நிறுவனம் ஒதுக்கியுள்ளது. ஐபிஓவின் புக் ரன்னிங் லீட் மேனேஜராக ஹெம் செக்யூரிட்டீஸ் மற்றும் ஐபிஓவிற்கான பதிவாளராக லிங்க் இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட் உள்ளன.
மார்ச் 2023-ல் முடிவடைந்த நிதியாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 256 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 10.2 கோடியாகவும் இருந்தது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.