தங்கம் விலை சுவரனுக்கு 42 ஆயிரத்தை தாண்டி ஏறிக்கொண்டே போகும் நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ரூ.5,325 ஆகவும் ஒரு சவரன் ரூ.42,600 ஆகவும் இருந்தது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து ரூ.5,320 ஆக உள்ளது. சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ. 42,560 ஆக இருக்கிறது.

Photo Gallery: Budget2023:பட்ஜெட் 2023: வருமானவரி உச்சவரம்பு விலக்கு உயர்த்தப்படுமா? எதிர்பார்ப்புகள் என்ன

24 கேரட் தங்கம் ஒரு கிராம் நேற்று ரூ.5,809 ஆக இருந்தது. இன்று 5 ரூபாய் சரிந்து ரூ.5,804 ஆக உள்ளது. ஒரு சவரன் ரூ.46,472 லிருந்து 40 ரூபாய் குறைந்து, ரூ.46,432 ஆக உள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா குறைந்து, 74 ரூபாய் 30 பைசா விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,300 ஆக இருக்கிறது.