இப்ப நகை வாங்கலாமா? தங்கம், வெள்ளி விலை இன்று எவ்வளவு?

இரண்டு நாட்களுக்குப் பின் சற்று விலை குறைந்த ஆபரணத் தங்கம் மறுபடியும் ஏறுமுகமாகத் திரும்பிவிட்டது. வெள்ளியின் விலை மாற்றம் இல்லை.

Gold Rate Today in Chennai: Know the price of gold in Tamilnadu

எதிர்காலத்திற்காக சேமிக்க விரும்புகிறவர்களுக்கு தங்கம் வாங்குவது சிறந்த முதலீடாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பாகவும் அதிக லாபம் கொடுப்பதாகவும் இருக்கிறது. சந்தையின் ஏற்ற இறக்கத்தைத் தாண்டியும் தங்கம் நிச்சயமான லாபத்தைக் கொடுக்கக்கூடியது. இதனால், பலர் தங்கத்தில் முதலீடு செய்ய எப்போதும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சற்று கூடியிருக்கிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. பெரிய அளவுக்கு விலை உயரவில்லை என்றாலும் விலை குறையாமல் தொடர்ந்து அதிகரித்தபடியே இருப்பது நகை பிரியர்களை ஏமாற்றம் அடைய வைக்கிறது.

முதல் முறையாக அமீரக கச்சா எண்ணெய்க்கு ரூபாயில் பெமெண்ட் செய்த இந்தியா!

தங்கம் விலை:

திங்கட்கிழமை 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.43,960 விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பின் சற்று விலை குறைந்த ஆபரணத் தங்கம் மறுபடியும் ஏறுமுகமாகத் திரும்பிவிட்டது. சவரனுக்கு 40 ரூபாய் குறைந்திருந்த நிலையில், இன்று அதே அளவுக்கு விலை கூடியிருக்கிறது.

Gold Rate Today in Chennai: Know the price of gold in Tamilnadu

சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40 விலை அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ.44,000 க்கு விற்கப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.5 கூடியுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,500 க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் இதேபோல உயர்வு கண்டுள்ளது. சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு ஒரு சவரன் ரூ.48,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை:

தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளியின் விலை சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் மாற்றம் ஏதும் இல்லாமல் நேற்றிய விலையில் நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி 76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 76,000 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு... உடனே வாங்கி போடுங்க - ஆனந்த் சீனிவாசன்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios