தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்து வரும் நிலையில், இன்றைய தங்க விலை என்ன என்பதை பார்க்கலாம்.

2023ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகமாகி கொண்டே வருகிறது. இது நகைப்பிரியர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ 41,520 ஆக விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,190 ஆக விற்பனை ஆனது.

இதையும் படிங்க..ரியல் No.1 இவர்தான்.. நடிகர் விஜயை பின்னுக்கு தள்ளிய அல்லு அர்ஜுன்.! எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

இன்றைய நிலவரப்படி, (மார்ச் 11) தங்கம் சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.42,160-க்கு விற்பனையாகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.5,270க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னை, திருச்சி மற்றும் கோவையின் தங்க நிலவரம் இது ஆகும். சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து ரூ.68.70 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ. 68,700-க்கு விற்பனையாகிறது.

இதையும் படிங்க..அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியல் ரெடி.. எப்போ ரிலீஸ் தெரியுமா.? திமுக கொடுத்த ஷாக்