தங்கம் விலை தொடர் உயர்வு....! பொதுமக்கள் கவலை ...!
மாலைநேரநிலப்படி, தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை தொடர் அதிகரிப்பால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
காலைநேரநிலப்படி , தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் :
22 கேரட் தங்கம் கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து, 2 ஆயிரத்து 841 ரூபாயாகவும், சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து, 22 ஆயிரத்து 728 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே சமயத்தில், 24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் 50 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து 740 ரூபாய்க்கும் விற்பனையாகிறது
வெள்ளிவிலைநிலவரம் :
ஒரு கிராம் வெள்ளி 40 காசு அதிகரித்து, 44 ரூபாய் 50 பைசாவாகவும்
ஒரு கிலோ பார் வெள்ளி 41 ஆயிரத்து 990 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
