அதிர்ச்சி செய்தி: தங்கம் விலை பயங்கர உயர்வு.! 

தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வரும் இந்த தருணத்தில் ஒரு சவரன் தங்க விலை நேற்று 27 ஆயிரத்தை கடந்து உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று ஓரே நாளில் கிராமுக்கு 73 ரூபாய் அதிகரித்து,சவரனுக்கு 584 ரூபாய் அதிகரித்து இருந்தது. இதனால், சவரன் விலை நேற்று 27 ஆயிரம் தாண்டியது.

 

 

அதாவது, கடந்த ஜனவரி மாதம் தான் ஒரு சவரன் விலை 25 ஆயிரத்தை தாண்டியது. மேலும்   ஜூன் மாதம் 26 ஆம் தேதி 26 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தங்கம் உயர்ந்து. அன்றைய தினத்தில் ஒரே நாளில் 900 ரூபாய் வரை அதிகரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்றுதான் சவரன் விலை 27 ஆயிரம் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் விலை மீண்டும் அதிரடியாக  உயர்ந்து உள்ளது என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

விவரம்: 

22 கேரட் ஆபரண தங்கம் : கிராம் ரூ. 3416.00 (33 ரூபாய் அதிகரிப்பு), சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்து, 27 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதே போன்று வெள்ளி விலையும் அதிகரித்து உள்ளது. அதன் படி, கிராமுக்கு ரூ. 20 பைசா அதிகரித்து 44.50 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 200 அதிகரித்து 44 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

Read More : இன்னைக்கு காஞ்சி கருவாடா ஆயிடுவோமா..!? வானிலை அறிவிப்பு என்னதான் சொல்லி இருக்கு படியுங்களேன்...!

அதன்படி பார்த்தால் ஒரு சவரன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 30 ஆயிரத்தை தாண்டி விடுவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக 2019 பொது பட்ஜெட் தாக்கலின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தார்.

இதன்மூலம் சவரன் விலை 700 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளுக்கு நாள் சவரன் விலை மெல்ல மெல்ல அதிகரித்து தற்போது 27 ஆயிரத்தை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.